|  "செருந்திப்பூச் செருகி 
        நோக்கி இக்குழையழகி தென்றான்" காதலன்; "இடுவெங்கைக்கிடுதி யென்னா, அக்குழை யோடும்வீசி யன்பனுக் கலக்கண்
 செய்தாள் காதலி" எனவும், காதலன்மார்பிற் பூந்தாது சிந்திக் கிடந்தது மான்
 மதமும் சந்தனமும் கலந்த சாந்து போலத் தோன்றக் கண்டு "தையல் யாரைத்
 தோய்ந்த சாந்தென்றாள்" அவன் "உள்ளத் துன்னையும் சுமந்து கொய்த
 ஆய்ந்த சண்பகத்தா தென்றான்" உடனே அத்தையல் "நெய்சொரி
 யழலினின்றாள்" எனவும் புலவி நுணுக்கம் புகன்றிருப்பதை நோக்குங்கள்.
 ஊடற்குக் காரணம் உய்த்துணர வைத்திருப்பதைக் கண்டு கண்டு
 களிப்பீர்கள்.
       பின் 
        சண்பக மாறன் சந்திரகாந்தக் கல் மேடையில் மனைவியுடன் தனித்திருந்தது; தென்றல் கூந்தலின் வாசத்தைக் கொணர்ந்தது; இயற்கை
 மணமா செயற்கை மணமா என ஐயுற்றது; அக் கருத்தைத் தெளிவிக்குங்
 கவி பாடியவர்க்குப் பொற்கிழி யுரிய தெனத் தூக்கியது. தருமி இறைவனை
 வேண்டக் 'கொங்குதேர் வாழ்க்கை' என்ற கவி பாடியருளியது; நக்கீரன்
 அக்கவிக்குங் குற்றங் கூறியது; இறைவன் ஒரு புலவனாக வந்து கீரனுடன்
 உரையாடியது. நெற்றிக் கண் காட்டியது. "ஆகம் முற்று நீர் கண்ணானாலும்
 மொழிந்த நும் பாடல் குற்றம் குற்றமே" யெனக் கீரன் சாதித்தது; நெற்றிக்கண்
 நெருப்பின் வெம்மையாற் கீரன் பொற்றாமரைப் பொய்கையுட் போய்
 விழுந்தது; இறைவன் றிருவுருக் கரந்தது ஆகிய வரலாற்று விளக்கமும்
 அப்படலத்திற் காணலாம்
       (5) 
        கீரனைக் கரையேற்றிய படலம் : கீரன் பொற்றாமரைப் 
        பொய்கை வீழ்ந்து துன்புறும் நிலையைச் சங்கப் புலவர் வருந்தி ஆய்ந்து
 ஆலவாயண்ணல் தாளிணை பணிந்து "திருத்தனே சரணம் மறைச்சென்னி
 மேல் நிருத்தனே சரணம்" என்று துதித்தனர். நக்கீரன் புரிந்த பிழையைப்
 பொறுத்து அவனை உய்விக்க வேண்டினர். இறைவன் இறைவியோடு
 எழுந்தருளி வந்து பொன்னளினப் பூந்தடத்து ஞாங்கர்ப் புலவர் குழாத்துடன்
 நின்று அருட்கணானோக்கினன். உடனே கீரன் அன்பு வடிவமாயமர்ந்து
 "கைலைபாதி காளத்திபாதி" என்னும் அந்தாதி நூல் பாடியடியிணையிற்
 சாத்தினன். இறைவன் நேர் வந்து கரம் பற்றி யீர்த்துக்கரையேற்றினன். பின்
 கோபப் பிரசாதம் என்னும் நூல் பாடினன். திருவருளை நாடினன். பின்னர்ப்
 பெருந்தேவ பாணியும், திருவெழு கூற்றிருக்கையும் பாடிச் சாத்திப்
 பணிந்தனன். இறைவன் நல்லருள் சுரந்து "முன்போல நாவலர் குழாத்திடை
 வதிக" எனக் கூறி மறைந்தான். சங்கப் புலவர் கழகத்தமர்ந்து தருமிக்குப்
 பொற்கிழியறுத்துக் கொடுத்து மன்னனும் வேறு சில வரிசையளிக்குமாறு
 |