|
செய்து மகிழ்ந்திருந்தனர்
என்பது.
(6)
கீரனுக் கிலக்கண முபதேசித்த படலம் : சங்கப்
புலவர்களுடன்
சார்ந்து வதிந்த கீரன் "இப் பொற்றாமரைப் பொய்கையே என்னுயிரைக்
காத்தது" என்று கருதி முக்காலமும் அதின் மூழ்கியெழுந்து மூர்த்தியைத்
தொழுதுவரும் நியமம் பூண்டான். அது கண்ட இறைவன் இலக்கணங்
கற்பிக்க வெண்ணினன். அங்கயற் கண்ணம்மை அப்போது குறுமுனிவன்
வரலாறு கூறி அவனை வருவித்து இவனுக்கு இலக்கணம் உணர்த்துமாறு
செய்வதே தக்கதெனக் கூறினள். அவ்வாறே இறைவன் மனத்தி னினைத்தனன்
மாதவனை. அம் முனிவனும் தன் பன்னியுடனோடி வந்து பணிந்தான்.
இலக்கணம் கற்பிக்குமாறு பணித்தான். அவனும் அவ்வாறே கற்பித்து முடித்து
விடைபெற்றுத் தன்னிருக்கை சேர்ந்தான். பின் இறைவி இறைவனை நோக்கி,
"கீரனுக்கு இலக்கணம் நீ யுணர்த்தாது மாதவனால் உணர்த்திய காரணம்
யாது?" என வினவினள். இவன் மனத்து மற்சமிரருப்பதே காரணம் என்று
கூறினள். கீரன் தானிழைத்த பிழையை யெண்ணி யெண்ணி வருந்தினான்.
பிழை பொறுத்தருள் புரிந்த பெருமானுக்கு யான் செய்வதொன்றுமுளதோ
என்று நினைத்துத் தான் கற்ற இலக்கணத்தை மற்றையோர்க்கும் உணர்த்தி
மகிழ்ந்திருந்தான் என்பது.
(7)
சங்கத்தார் கலகந் தீர்த்த படலம் : சங்கப்
புலவர்
நாற்பத்தெண்மரும் வேறு வேறு தமிழ் நூல்களியற்றித் தாம் தாம்
செய்தவற்றையே சிறந்ததெனக் கொண்டு பெருமை பேசிச் சோமசுந்தரக்
கடவுள் முன் வந்து "யாம் செய்த பாடல்களிற் சிறந்தவை யாவை? எடுத்துக்
காட்ட வேண்டும்" என்று வேண்டினர். அவ்வமையத்தில் மூல
விலிங்கத்தினின்றும் ஒரு புலவனாகத் தோன்றி "இந்நகரில் ஒரு வணிகன்
தனபதி என்ற பெயருடையான் உளன். அவன் மனைவி குணசாலினி என்ற
பெயருடையாள். அவ்விருவர்க்கும் புதல்வனொருவனுளன். மதன் போலும்
வனப்புடையன். அவன் மூங்கைப் பிள்ளை. அவன் பால் நுங்கவியைப்
படித்துக் காட்டுங்கள். அவன் மதிக்குந் தமிழேயுயர்ந்த தமிழ் எனக்
காணுங்கள்" என்று கூறினன். புலவர்கள் ஐயமுற்று 'இறைவா! வணிகனும்
ஊமனுமாகிய ஒருவன் எம். கவிகளின் நன்று தீது ஆய்ந்து எங்ஙனம்
கூறுவன்' என வினவினர். "சொல்லாழம், பொருளாழங் கண்டால் அவன்
முடி துளக்கிக் களிதூங்கு முகத்துடன் இருப்பன்; அவன் செயல் கண்டால்
உங்கட்கு மனத்திலெழும் ஐயமெல்லாம் நீங்கும்" என்று கூறி இறைவன்
மறைந்தான். பின்னர் அவ்வாறே அவ்வணிகனை அழைத்து இருத்திப்
|