பக்கம் எண் :

536திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



பாடல்களைப் புலவர் உரைப்ப அவற்றைக் குறிப்பாலுணர்ந்து காட்ட
ஒவ்வொருவருங் கண்டு கண்டு அவரவர் பாடல் அளவறிந்து மகிழ்ந்து
ஒருவரோடொருவர் நட்புக் கொண்டாடி நயந்திருந்தார் என்பது.

     (8) இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம் : குலேச பாண்டியன்
என்பவன் அரசு புரிந்தான். அம் மன்னன் இலக்கணம் இலக்கியமாகிய
நூல்களின் வரம்பு கண்டவன். எத்தகைய சிறந்த நுலினுட்பமும் அறியும்
புலமையுடையவன். ஆதலால் அவனுக்குச் சங்கப் பலகையிடந்தந்தது. அம்
மன்னன் பெருமையைக் கேள்வியுற்ற இடைக்காடன் கவி பாடி வந்து கண்டு
தான் இயற்றிய கவியைரங்கேற்றினன். தமிழருமையறிந்தவனான அவன்
அழுக்காறு மனத்துட்கொண்டு, முடிதுளக்காது, முகமலர்ச்சி காட்டாது ஒன்று
முரையாது வாளா இருந்தான். இடைக்காடனுக்குச் சின மூண்டெழுந்து
இறைவன் சந்நிதியில் வந்து பணிந்து "தமிழறியும் பெருமானே! செல்வமும்
கல்வியும் உள்ளவன் என்று மதித்துக் கவிபாடிப் பாண்டியனைக் கண்டேன்.
அவன் என் கவியை மதித்திலன். கருங்கடல், நெடுங்கழி, கொடு விலங்கு,
பறக்கும் புள், பருமரம், பாலைவனம் போன்ற அஃறிணைப் பொருள்களை
யொத்திருந்தான். என்னை யிகழ்ந்திலன், சொல் வடிவாம் இமயப்
பாவையையும் பொருள் வடிவாகிய நின்னையுமே யிகழ்ந்தனன். எனக்கு
மட்டும் இழிவோ? ஆய்ந்து பார்" என்று தன் குறை கூறிக் கோயிலை விட்டு
நீங்கிச் சென்றான். உடனே இலிங்கவுரு மறைய இறைவன் உமையோடு
வையை நதித் தென்பால் ஓர் ஆலயம் தோன்றக் கண்டங்கிருந்தான்.
இடைக்காடன் முன் சென்றான். இறைவன் பின் சென்றான். இருந்த புலவர்
யாவரும் பின்றொடர்ந்து சென்று தங்கினார். விடியலின் அடியார்
"இலிங்கவுருக்கண்டிலோம்" என மன்னற்குக் கூறினர். அவன் "எங்குச்
சென்றாய்? யான் எப்பிழை செய்தேன்" என்று பலவாறு புலம்பிப், பின்
இருந்த இடமறிந்து கண்டு, காரண மறியாது கலங்கி வருந்தினன். அவ்வமயம்
இறைவன் தான் இங்கு வந்துறைந்ததற்குக் காரணமும் இடைக்காடன்
செய்யுளையிகழ்ந்ததையுங் கூறக் கேட்டு மீண்டும் கோயிற்கு வர
வேண்டினன். அவ்வாறே இறைவன் வந்தமர்ந்தான். இறைவன் ஆலயத்தில்
அமர்ந்த பின் புலவோரனைவரையும் போற்றியழைத்துத், தன்னரண்மனையில்
இருத்தி, வாழை கமுகு நாட்டித், தோரணம் பூரண கும்பம் பொலிய
அலங்கரித்து, இடைக்காடரைப் பொன்னாசனத் திருத்திக், கவிகேட்டுப்
பரிசில் நல்கி, அப் புலவர் பின் ஏழடி சென்று மீண்டு வந்தான். மற்றைப்
புலவர்களையும் நோக்கி இடைக்காடர்க்குச் செய்த குற்றம் பொறுக்குமாறு