|  
        நீற்ற திருநிற்றினயணிந்த 
        நெறறியினரும் ஆகிய வானப் பிரத்தர்கள்,  
        இல்லொடு நண்ணினார் - மனைவியரோடும் வந்து சேர்ந்தார்கள் எ - று. 
            நீர்க்கலம் 
        - நீரினையுடைய கமண்டலம்; இது கரகமெனவும்  
        குண்டிகையெனவும் படும்; இதனை உறியின்கண் வைத்து எடுத்துச் செல்வர்.  
        தோள்காறும் தொங்குமாறிட்டவென்க. வேட்ட என்பது வேட்கும் கருவியாகிய  
        வென்னும் பொருளில் வந்தது. தீத்தொட்ட கோல் - தீப்பொருந்திய கோல்;  
        தீக்கடைபோல். வானப்பிரத்தராவார் இல்லை விட்டுத் தீயொடு வனத்தின்கட்  
        சென்று மனைவி வழிபடத் தவஞ்செய்யும் ஒழுக்கத்தினையுடையார். (22)  
      
      
        
	முண்ட நெற்றியர் வெண்ணிற மூரலர் 
	குண்டி கைக்கையர் கோவணம் வீக்கிய 
	தண்டு கையர்கற் றானையர் மெய்யினைக் 
	கண்டு பொய்யினைக் காய்ந்தவர் நண்ணினார்.  | 
	 
	 
	
	
		
       
           (இ 
        - ள்.) முண்டம் நெற்றியர் - திருநீ றணிந்த நெற்றியினரும், வெள்  
        நிற மூரலர் - வெள்ளிய நிறத்தினையுடைய பல்லினரும், குண்டிகை கையர் -  
        கமண்டல மேந்திய கையினரும், கோவணம் வீக்கிய தண்டு கையர் -  
        கோவணம் யாத்த கோலினை யேந்திய கையினரும், கல் தானையர் -  
        கல்லாடையினரும், மெய்யினைக் கண்டு பொய்யினைக் காய்ந்தவர் -  
        மெய்ப்பொருளை யுணர்ந்து பொய்ப் பொருளை வெறுத்தவரும் ஆகிய  
        துறவினர், நண்ணினார் - வந்து சேர்ந்தார்கள் எ - று. 
            மூரல் 
        - புன்னகையுமாம். கற்றானை - காவிக்கற் குழம்பிற் றோய்த்த  
        ஆடை; 
      
        
          | "கற்றோய்த் 
            துடுத்த படிவப் பார்ப்பான்"  | 
         
       
      என்பது முல்லைப்பாட்டு. 
        பொய்யாவன நிலையில்லாதன. துறவினராவார்  
        முற்றத் துறந்த யோக வொழுக்கத்தினர்; சன்னியாசிகள். (23)  
      
      
        
	தீந்தண் பாற்கடல் செந்துகிர்க் காட்டொடும் 
	போந்த போன்மெயிற் புண்ணியப் பூச்சினர் 
	சேந்த வேணியர் வேத சிரப்பொருள் 
	ஆய்ந்த கேள்வி யருந்தவ ரெய்தினார்.  | 
	 
	 
	
		
       
           (இ 
        - ள்.) தீந்தண்பால் கடல் செந்துகிர்க் காட்டொடும் போந்த போல் 
         
        - இனிய குளிர்ந்த பாற்கடலானது சிவந்த பவளக்காட்டொடும் வந்ததுபோல்,  
        மெய்யில் புண்ணியப் பூச்சினர் - மேனியில் திருநீறு தரித்தவரும், சேந்த  
        வேணியர் - சிவந்த சடையினை உடையவரும் ஆகிய, வேத சிரப்பொருள்  
        ஆய்ந்த கேள்வி - உபநிடதப் பொருளை ஆராய்ந்த கேள்வியையுடைய,  
        அருந்தவர் எய்தினார் - அரிய தவத்தினையுடைய சைவ முனிவர்கள் வந்து  
        சேர்ந்தார்கள் எ - று. 
            நீறு 
        பூசிய திருமேனிக்குப் பாற்கடலும், செஞ்சடைக்குத் துகிர்க்காடும்  
        உவமம்; புண்ணியம் நீறாதல்.   
     |