பக்கம் எண் :

556திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



     வேட்ட : வினையாலணையும் பெயர்; வேள் : பகுதி. வேட்டவாங்
கென்பது வேட்டாங் கென்றாயிற்று; ஆங்கு : உவமச்சொல். இருப்பது,
போல்வது என்பன தொழிற்பெயர்கள். (35)

திரைவளைக் கழுத்துத் தசைந்துநால் விரலி
     னளவதாய்த் திரண்டுமூன் றிரேகை
வரைபடிற் கொழுந னகிலமன் னவனா
     மாாபகந் தசைந்துமூ வாறு
விரலள வகன்று மயிர்நரம் பகன்று
     மிதந்ததேல் விழுமிதாம் வேய்த்தோள்
புரையறத் தசைந்து மயிரகன் றென்பு
     புலப்படா மொழியகோ மளமாம்.

     (இ - ள்.) திரைவளைக் கழுத்து - கடலின்றோன்றிய சங்குபோரும்
கழுத்து, தசைந்து - தசைவுற்று, நால்விரலின் அளவது ஆய் - நான்கு
அங்குர அளவினையுடையதாய், திரண்டு - உருட்சியாய், மூன்று இரேகை
வரைபடின் - மூன்று இரேகையாகிய வரையினைப் பொருந்தி யிருக்குமாயின்,
கொழுநன் அகில மன்னவன் ஆம் - அப்பெண்ணின் கணவன் எல்லா
வுலகிற்கும் அரசனாவான்; மார்பகம் - மார்பிடமானது, தசைந்து -
தசையுடையதாய், மூவாறு விரல் அளவு அகன்று - பதினெட்டங்குல
அளவுபரந்து, மயிர் நரம்பு அகன்று மிதந்ததேல் விழுமிது ஆம் - மயிரும்
நரம்புமில்லாமல் உயர்ந்திருக்குமாயின் நன்மையுடையதாம்; வேய்த்தோள் -
மூங்கில்போன்ற தோள்கள், புரை அறத் தசைந்து - குற்றமறத் தசைப்பற்று
உடையனவாய், மயிர் அகன்று - மயிரில்லாமல், என்பு புலப்படா மொழிய -
எலுமபு தோன்றாத மொழிகளையுடையன (ஆயின்), கோமளம் ஆம் -
நன்மையாம் எ - று.

     திரை கடலுக்கு ஆகுபெயர். இரேகை, வரை யென்பன ஒரு பொருளன.
மொழி தோள் முதலியவற்றிலுள்ள கரடு; இது முளியெனவும் வழங்கும்,
மொழியவாயின் என விரிக்க. '36)

செங்கைநீண் டுருண்டு கணுக்கண்பெற் றடைவே
     சிறுத்திடிற்* செல்வமோ டின்பந்
தங்கும்வள் ளுகிர்சேந் துருண்டுகண் ணுள்ளங்
     கவர்வதாய்ச் சரசரப் பகன்றால்
அங்கவை நல்ல வகங்கைமெல் லெனச்சேந்
     திடைவெளி யகன்றிடை யுயர்ந்து
மங்கல மாய்ச்சில் வரைகளி னல்ல
     விலக்கண வரையுள மாதோ.

     (இ - ள்.) செங்கை சிவந்த கைகள், நீண்டு உருண்டு கணுக்கள்
பெற்று அடையவே சிறுத்திடில் - நீண்டு உருண்டு கணுக்களையுடையனவாய்