|  
        வட்ட வடிவாய், தசைவடு 
        - தசைப்பற்றுடையதாயின் (நன்மையாம்); சங்கை -  
        கணைக்கால்கள், மயிர் நரம்பு தங்கிடாது - மயிரும் நரம்பும் இல்லாமல்,  
        உருட்சியாய் அடைவே சிறுத்து - திரண்டு முறையே சிறுத்து, சமவடிவாய்  
        அழகு அடைந்தவாம் - (தம்மில்) ஒத்த வடிவாய் அழகுடையனவாயின்  
        (நன்மை) ஆகும்; சிரை என்பு அறத் தசைந்து - நரம்பும் எலும்பும் இன்றித்  
        தசைந்து, யாமை முதுகு எனத் திரண்டு உயர்ந்து - யாமையின் முதுகுபோலத்  
        திரண்டு உயர்ந்து, அழகு மங்கலம் பொலிந்த - அழகினாலும் பொலிவினாலும் விளங்கிய, 
        புற அடி மடந்தை - புறவயினையுடைய பெண், மன்னவன் பன்னி  
        ஆம் - அரசனுக்கு மனைவியாவாள் எ - று. 
            ஆம் 
        என்பதனை அடைந்தவாம் எனப் பிரித்துக் கூட்டுக. சிரை -  
        நரம்பு. மன்னும் ஓவும் அசைகள். (40)  
      
        
	அல்லியங் கமலக் கால்விர லுயர்ந்து 
		     தூயவா யழக வாய்க் கழுநீர் 
	மெல்லிதழ் நிரைத்தாங் கொழுங்குறத் திரண்டு 
		     வாலுகிர் வெண்மதிப் பிளவு 
	புல்லிய போன்று மெல்லிய வாகிப் 
		     புகரறத் தசைந்தன வகத்தாள் 
	சொல்லிய தசைவு மென்மையுஞ் சமமுந் 
		     துகளறப் படைத்தன நன்றால்.  | 
	 
	 
	
	
		
       
           (இ 
        - ள்.) அல்லி அம் கமலக் கால் விரல் - அகவிதழையுடைய  
        அழகிய தாமரை மலர் போன்ற காலின் விரல்கள், உயர்ந்து தூய வாய்  
        அழகவாய் - உயர்ந்து தூய்மையுடையனவாய் அழகியனவாய், கழு நீர் மெல்  
        இதழ் நிரைத்தாங்கு - செங்கழுநீர் மலரின் மெல்லிய இதழ்களை வரிசைப்பட  
        வைத்தாற்போல, ஒழுங்கு உறத் திரண்டு - ஒழுங்கு பெறத் திரண்டு, வால்  
        உகிர் - வெள்ளிய நகங்கள், வெள்மதிப் பிளவு புல்லிய போன்று - வெள்ளிய  
        மதியின் பிளவுகள் அவ் விரல்களைப் பெதருந்தியன போலப் (பொருந்தப்  
        பெற்று), மெல்லிய வாகி - மென்மையுடையனவாய், புகர் அறத் தசைந்தன  
        (நன்று) - குற்றமின்றித் தசையுடையனவாயின் நன்மையாம், அகத்தாள் -  
        உள்ளங் கால்கள், சொலலிய தசைவும் மென்மையும் சமமும் துகள் அறப்  
        படைத்தன நன்று - நூலிற் கூறிய தசைப் பற்றும் மென்மைத் தன்மையும்  
        சமனாதலும் குற்றமறப் பெற்றனவாயின் நன்மையாம் எ - று. 
           திரண்டு 
        உகிர் பொருந்தப் பெற்று மெல்லியவாகி யென்க. நன்று  
        என்பது முன்னும் கூட்டப்பட்டது. ஆல் : அசை. (41)  
      
        
	வண்ணமாந் தளிர்போற் சிவந்தெரிபொன்போல் 
		     வைகலும் வெயர்வையற் றாகம் 
	உண்ணமா யிருக்கிற் செல்வமுண் 
		     டாகு மொண்மணம் பாடலங் குவளை  | 
	 
	 
	
	
	 |