|  
        பொருளுரைப்பாருமுளர். 
        மாடக் கூடல் - நான்மாடக்கூடல் என்பது முதல்  
        குறைந்து நின்றது என்றுமாம். வீழும் - விரும்பும். நாகநாடு - விண்ணுலகம்.  
        நுகர்வான், வினையெச்சம். (22)  
      
      
        
          |  
                                 - 
              வேறு 
           | 
         
         
          மாத்தாண் 
            மதமா னெருத்தின் மடங்க லெனச்செல் வாரும் 
            பூத்தா ரொலிவாம் பரிமேற் புகர்மா வெனப்போ வாரும் 
            பாத்தார்*பரிதி யெனவாம் பரித்தே ருகைத்தூர் வாருந் 
            தேத்தா ருளர்வண் டலம்பச் சிலம்பி னடக்கின் றாரும்.  | 
         
       
       
           (இ 
        - ள்.) மாத்தாள் மதமான் எருத்தில் - பெரியதாளையும்  
        மதமயக்கத்தையுமுடைய யானையின் பிடரில், மடங்கல் எனச் செல்வாரும்  
        - சிங்கத்தைப்போலச் செல்வாரும், பூத்தார் ஒலிவாம் பரிமேல் - அழகிய  
        கிண்கிணிமாலை ஒலிக்கும் தாவுகின்ற குதிரைமேல், புகர்மா எனப்  
        போவாரும் - புள்ளியையுடைய முகத்தையுடைய யானையைப்போலப்  
        போவாரும், பாத்து ஆர் பரிதிஎன - (பன்னிரண்டாகப்) பகுக்கப்பட்டு  
        நிறைந்த சூரியர்களைப்போல, வாம்பரித்தேர் உகைத்து ஊர்வாரும் -  
        தாவுங்குதிரை பூட்டிய தேரினைத் தூண்டி நடத்துவாரும், தேமதார் உளர்  
        வண்டு அலம்பச் சிலம்பின் நடக்கின்றாரும் - தேன்நிறைந்த மாலையிலே  
        கிண்டுகின்ற வண்டுகள் ஒலிக்க மலைபோல நடந்து செல்வாரும். 
            யானைமீது 
        சிங்கம் செல்வதுபோலவும், குதிரை மீது யானை  
        போவதுபோலவும், மலை நடப்பது போலவும் என  
        இல்பொருளுவமையாக்கலுமாம். ஆதித்தர் பன்னிருவராகலின் பாத்தார்  
        என்றார். தேன் தேம் எனத் திரிந்தது. செல்வாரும் போவாரும் ஊர்வாரும்  
        நடக்கின்றாரும் ஆகிய ஆடவரும் என 25 - ம் செய்யுளோடு இயைக்க. (23)  
      
	
	நீலப் பிடிமேற் பிடிபோ னெறிக்கொள் வாருந் தரள 
		மாலைச் சிவிகை மிசைவெண் மலரா ளெனச்செல் வாரும் 
		ஆலைக் கரும்பன் றுணைபோ லணித்தார்ப் பரியூர் வாருங் 
		கோலத் தடக்கை பற்றிக் கொழுந ருடன்போ வாரும்.  | 
	 
	 
		
	   
           (இ 
        - ள்.) நீலப்பிடிமேல் பிடிபோல் நெறிக்கொள்வாரும் - கரிய  
        பெண் யானை மீது பெண்யானைபோலச் செல்வாரும், தரளமாலைச்  
        சிவிகைமிசை வெண் மலராள் எனச் செல்வாரும் - முத்துமாலைகள் தூக்கிய  
        பல்லக்கின்மேல் வெண்டா மரையாளாகிய கலைமகள்போலச் செல்வாரும்,  
        ஆலைக்கரும்பன் துணைபோல் - ஆலையில் அமையுங் கருப்பு  
        வில்லையுடைய மதவேளின் வாழ்க்கைத்துணையாகிய இரதிதேவியைப்போல,  
        அணித்தார்ப் பரிஊர்வாரும் - அழகிய கிண்கிணி மாலையையணிந்த  
        குதிரைமேற் செல்வாரும், கோலத்தடக்கைபற்றி - (கொழுநர்களின்) 
       
            * 
        (பா - ம்.) பார்த்தார்.   
     |