|  பன்னிரு விரல்மேல் 
        விளங்கிய தலம் 0என்று - முடியின்மேல் பன்னி ரண்டங்குலத்துக்கு மேலாக விளங்கிய தலம் என்றும், எண் இல் வானவர்
 முனிவோர் முயன்று மாதவப்பயன் அடைந்து - அளவிறந்த தேவர்களும்
 முனிவர்களும் நோற்றுப் பெரிய தவப்பயனை எய்தி, சித்தம் மாசு அகன்று
 சீவன் முத்தராய் வதிவது என்று - மனக் குற்றங்கள் நீங்கிச் சீவன் முத்தராய்
 வசிக்கப் பெறுவது என்னும், அற நூல் செப்பிய மதுரை - தரும நூல்கள்
 எடுத்துக்கூறும் மதுரைப் பதியாம்; அந்நகரில் - அத் திருப்பதியிலே எ - று.
       அது 
        என்பதனை யாதெனில் அது எனக் கூட்டி யுரைக்க : அகிலம் - எல்லாம். பன்னிரு விரன்மேல் விளங்கிய தலம் - துவாதசாந் தத்தலம்; தல
 விசேடத்திற் காண்க. என்று என்பது முன்னுங் கூட்டி யுரைக்கப்பட்டது. (8)
 
        
	| தெளிதரு விசம்பி னிழிந்ததோர் விமான சிகாமணி யருகுதென் மருங்கின்
 முளிதரு பராரை வடநிழல் பிரியா
 முழுமுதல் வழிபடு மறவோர்க்
 களிதரு கருணை முகமலர்ந் தளவா
 வருங்கலை யனைத்தையுந் தெளிவித்
 தொளிதரு மனைய மூர்த்தியே நுங்கட்
 கோதிய மறைப்பொரு ளுணர்த்தும்.
 |       (இ 
        - ள்.) தெளிதரு விசும்பின் இழிந்தது ஓர் விமான சிகாமணி அருகு - தெளிந்து வானினின்றும் இறங்கியதாகிய ஒப்பற்ற
 விமானங்களுக்கெல்லாம் சூளா மணியாயுள்ள விமானத்தின் அருகில், தென்
 மருங்கில் - தென்பாலில், முளிதரு பராரை வடநிழல் பிரியா முழு முதல் -
 உலர்ந்த (பொருக்குள்ள) பருத்த அரையையுடைய கல்லால மரத்தி
 னிழலினின்றும் நீங்காத முழுமுதற் கடவுள், வழிபடும் அறவோர்க்கு -
 வழிபடாநின்ற முனிவர்க்கு, அளிதரு கருணை முகம் மலர்ந்து - முதிர்ந்த
 கருணையுடன் முகமலர்ச்சியுற்று, அளவா அருஙகலை அனைத்தையும்
 தெளிவித்து - அளவிறந்த அரிய நூல்கள் அனைத்தையும் தெளிவுறுத்தி,
 ஒளி தரும் - விளங்கா நிற்பர்; அனைய மூர்த்தியே - அச்சிறந்த தென்முகப்
 பெருமானே, ஓதிய மறைப்பொருள் நுங்கட்கு உணர்த்தும் - (தாம்) அருளிய
 வேதத்தின் பொருளை உங்கட்கு அறிவிப்பர் எ - று.
       விமான 
        சிகாமணி - விமானங்கள் முடியிற் றரிக்கும் மணிபோலும் சிறப்புடையது. பருஅரை பராரை யென்றாயது. அரை - அடிமரம். வடம் -
 ஆல். அறவோர் - சனகர் முதலிய முனிவர். அளிதல் - முதிர்தல்; அளிதரு
 கருணை என்பதற்கு அன்பு பெற்ற அருள் என்று கூறுவது ஈண்டுச்
 சிறப்பின்று. அளவில்லாத என்பது அளவா என நின்றது. ஒளிதரும் -
 ஞானத்தைத் தரும் என்றுமாம். (9)
 
        
	| அங்கவன் றிருமு னருந்தவ விரத மாற்றுவான் செல்லுமி னெனவப்
 புங்கவ னருள்போல் வந்தமா தவன்பின்
 புனிதமா முனிவரு நங்கை
 |  |