|  விரைந்துபோய், நான்கு 
        இரு வெள்ளி வரைகள் தம்பிடரில் கிடந்தது ஓர் மேருவரை புரை விமானம் மேல் - எட்டு வெள்ளிமலைகளின் பிடரியிலே
 தங்கியதாகிய ஒரு பொன்மலையைப் போலும் விமானத்தின்கண், காணா
 உரைகள் தம்பொருளைக் கண்களால் கண்டாங்கு - தம் அகக்கண்ணாற்
 காணக்கூடாத மறைகளின் பொருளைப் புறக்கண்ணாற் கண்டது போல,
 உம்பர் தம்பிரானை நேர் கண்டு - தேவ தேவனாகிய சொக்கலிங்கக்
 கடவுளை நேரிற்பார்த்து, திரை கடந்திடும் பேரின்ப வாரியிலும் சேண்
 நிலத்திலும் விழுந்து எழுந்தார் - அலை யொழிந்த பேரின்பக் கடலினும்
 சேய்மை யாகிய நிலத்தினும் விழுந்து எழுந்தார்கள் எ - று.
       எட்டு 
        வெள்ளை யானைகளால் தாங்கப்பட்டிருக்கும் பொன் விமானம் எட்டு வெள்ளி மலைகளின் மேற் பொருந்தியமேரு மலையை ஒக்கு மென்றார். உரைகள் என்றது 
        வேதங்களை யுணர்த்திற்று; அவற்றின் பொருணிலை
 தெரியா துள்ளமுமுகமும் புலர்ந்தனர் என மேலே கூறினராகலின், ஈண்டு
 அங்ஙனம் காணப்படாப் பொருளையே கண்களாற் கண்டாங்குப் பிரானை
 நேர்கண்டு என்றார். விமான மேற்கண்டு என இயையும். முழு நிறைவுடைத்
 தாகலின் திரை கடந்திடும் என்றார்;
 
        
          | "திரை பொரா 
            மன்னும் அமுதத் தெண் கடலே" |  என்னும் திருவாசகமும் 
        நோக்குக; திரைகள் தந்திடும் எனப் பிரித்தல் பொருந்து மேனுங் கொள்க. நிலத்திலும் வாரியிலும் ஒருங்கு விழுந் தாராகக்
 கூறியது ஓர் அணி கருதிற்று. வரைகடம், உரைகடம் என்ப வற்றில் தம்
 சாரியை. (11)
 
	
	| கைதலை முகிழ்த்துக் கரசர ணங்கள் கம்பிதஞ் செய்துகண் ணருவி
 பெய்தலை வெள்ளத் தாழ்ந்துவாய் குழறிப்
 பிரமன்மா லின்னமுந் தேறா
 மைதழை கண்ட வெள்ளிமன் றாடும்
 வானவர் நாயக வானோர்
 உய்தர விடமுண டமுதருள் புரிந்த
 வுத்தம போற்றியென் றேத்தா.
 |       (இ 
        - ள்.) கைதலை முகிழ்த்து - கைகளைத் தலைமேற் குவித்து, கர சரணங்கள் கம்பிதம் செய்து - கைகளும் கால்களும் நடுங்கப்பெற்று, கண்
 அருவி பெய்து - ஆனந்தக் கண்ரீாகிய அருவியைப் பொழிந்து, அலை
 வெள்ளத்து ஆழ்ந்து - அலை வீசுகின்ற அவ் வெள்ளத்தில் மூழ்கி,
 வாய்குழறி - நாத்தடுமாறி, பிரமன் மால் இன்னமும் தேறா மைதழை கண்ட
 - பிரமனும் திருமாலும் இன்னமும் காணப்பெறாத கருமை மிக்க திரு
 மிடற்றை யுடையவனே, வெள்ளிமன்று ஆடும் வானவர் நாயக -
 வெள்ளியம்பலத்தில் திருக்கூத்தாடி யருளும் தேவதேவனே, வானோர் உய்தர
 விடம் உண்டு அமுது அருள்புரிந்த உத்தம - தேவர்கள் (உயிர்)
 பிழைக்குமாறு நஞ்சினை அருந்தி அமுதத்தை அளித்தருளிய உத்தமனே,
 போற்றி - எங்களைக் காத்தருள்க, என்று ஏத்தா - என்று துதித்து எ - று.
 |