பக்கம் எண் :

66திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



     (இ - ள்.) தொண்டர் நாதனை - அடியார்க்குத் தலைவனாகிய
சிவபெருமானை, தூதிடை விடுத்ததும் - தூதின்கண் செலுத்தியதும், முதலை
உண்ட பாலனை அழைத்தது - முதலையால் உண்ணப்பெற்ற சிறுவனை
வரவழைத்ததும், எலும்பு பெண் உருவாக்கண்டதும் - எலும்பைப்
பெண்வடிவாக உயிர்ப்பித்தது, மறைக்கதவினைத் திறந்ததும் -
வேதத்தினாலே அடைக்கப்பட்ட கதவைத் திறந்ததும், கன்னித் தண்தமிழ்ச்
சொலோ - அழியாத தண்ணிய தமிழ் மொழியா (அன்றி), மறுபுலச் சாற்றீர் -
ஏனைய நிலங்களின் வழங்கு மொழிகளா (புலவர்களே) சொல்லக் கடவீர்
எ - று.

     திருஞானசம்பந்தர் முதலிய பெருமக்கள் புரிந்த அருஞ்செயலெல்லாம்,
அவர்கள் பாடியருளிய தமிழ்ப் பதிகங்களின் வாயிலாக வாகலின், கருவியை
வினைமுதலாக்கித் தமிழ் செய்தனவாகக் கூறினர். வேறெம் மொழியாலும்
யாரும் இத்தகைய அருஞ்செயல் செய் திற்றில ரென்பார், ‘மறுபுலச்
சொற்களோ சாற்றீர்’ என்றார்.

     நாதனைத் தூதுவிடுத்த வரலாறு முன்னரே கூறப்பட்டது.

     முதலையுண்ட பாலனை அழைத்த வரலாறு : - தம்பிரான் றோழ ராகிய
நம்பியாரூரர் சேரமான் பெருமாளைக் காணணும் விருப்பினால்
திருவாரூரினின்றும் புறப்பட்டுச் சோணாடுகடந்து கொங்கு நாட்டிலே
திருப்புக்கொளியூர் அவிநாசியை அடைந்த காலையில், ஓரில்லத்தில்
மங்கலவொலியும், அதற்கெதி ரில்லத்தில் அழுகையொலியும் நிகழக்கேட்டு,
அதன் காரணத்தை விசாரித்தனர். ஐந்து வயதினரா யிருந்த இரண்டு
பார்ப்பனச்சிறார்கள், ஏரிக்குச் சென்று விளையாடும் பொழுது ஒருவனை
முதலை விழுங்கிவிட்டதென்றும், தப்பி வந்தானுக்கு இப்பொழுது உபநயன
விழா நடக்கிறதென்றும், மகனை யிழந்ததோர் துயரத்தால் அழுகின்றன
ரென்றும் அறிந்துகொண்டு, அப்பொழுது தம் வரவினையறிந்து, அழுகையை
விடுத்துவந்து மெய்யன்புடன் வணங்கிய பெற்றோர்களுக்கு, அச்சிறுவனை
அழைத்துத் தருவதாகத் துணிந்து, ஏரிக்கரையை யெய்திப் பதிகம்பாட,
முதலை அச்சிறுவனைக் கரையிலுமிழ்ந்து சென்றது என்பது.

"உரைப்பா ருரையுகந் துள்கவல் லார்தங்க ளுச்சியாய்
அரைக்கா டரவா வாதியு மந்தமு மாயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளி யூரவி நாசியே
கரைக்கான் முதலையைப் பிள்ளைத ரச் சொல்லு கானையே"

என்பது அத்திருப்பதிகத் திருப்பாட்டு.

     என்பு பெண்ணுருவாக் கண்ட வரலாறு : - திருமயிலாப்பூரிலே
செல்வத்திற் சிறந்த சிவநேயர் என்னும் வணிகரொருவர், கபாலீசர்
திருவருளால் ஓர் புதல்வியைப் பெற்று, அந் நங்கையை ஆளுடைய
பிள்ளையார்
க்கு உரிமையாக்கத் துணிந்து வளர்த்துவருங் காலத்தில் அவர்
சேடியருடன் மலர் கொய்யச் சென்று அரவுதீண்டி இறந்தனர். சிவநேயர்
மிகுந்த துயரத்துடன் அவ்வம்மையின் உடலைத் தகனஞ் செய்து,
பிள்ளையாரிடம் ஒப்புவித்தற்பொருட்டாக அச்சாம்பரையும் என்பையும் ஒரு
குடத்திலிட்டுக் கன்னிமாடத் திருத்தி, அவ்வம்மை உயிர்த்திருக்கும்
பொழுதிற்போலச் சேடியர் உபசரித்து வருமாறு செய்வித்தனர். அப்பொழுது