|
திருஞானசம்பந்தப்பெருமான்
அடியார் கூட்டங்களுடன் பல திருப்பதிகளும்
தரிசித்துக்கொண்டு திருவொற்றியூரை அடைந்திருந்தனர். சிவநேயர்
அதனைக் கேய்வியுற்றுத் திரு மயிலையிலிருந்து திருவொற்றியூர் காறும்
பந்தரிம் டலங்கரித்து ஞான சம்பந்தரை இறைஞ்சி அழைத்துவந்து நிகழ்ந்த
செய்தியைத் தெரிவிக்க, சம்பந்தப் பெருமான் அக்குடத்தினைக் கபாலீசர்
திருமுன் வருவித்துப், பதிகம்பாடியருள, அவ்வென்பானது அங்கே
கூடியிருந்த எண்ணிறந்தோரும் கண்டு அதிசயிக்கும்படி பெண்ணுருவெய்திப்
பன்னிரண்டாண் டளவு நிரம்பி வெளியே வர, ஆளுடைய பிள்ளையார்
தம்மால் உயிர்ப்பிக்கப்பெற்ற அவ்வம்மையை அங்கேயே இருக்கச் செய்து
கபாலீசரை வணங்கிக்கொண்டு எழுந்தருளினர் என்பது.
"மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான்,
ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க்
கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்" |
என்னும் அத்திருப்பதிகத்
திருப்பாட்டு.
மறைக்கதவினைத்
திறந்த வரலாறு : - திருஞானசம்பந்தரும்,
திருநாவுக்கரசரும் திருமறைக் காட்டுக்கு எழுந்தருளிய காலத்தில்,
ஞான சம்பந்தர் நாவுக்கரசரைப் பார்த்து, நாம் வேதங்கள் பூசித்துத்
திருக் காப்பிட்ட நேர் வாயில்வழியே சென்று இறைவரை வழிபடவேண்டும்
ஆகலின், நீர் திருக்கதவம் காப்புநீங்கப் பாடியருளும் என்று கூற
அரசுகளும் பதிகம்பாடிக் கதவு திறக்கச் செய்தனர் என்பது.
"அரக்களை விரலா லடர்த் திட்டநீர்
இரக்க மொன்றிலீ ரெம்பெரு மானிரே
சுரக்கும் புன்னைகள் சூழ்மறைக் காடரோ
சரக்க விக்த வந்திறப் பிம்மினே" |
என்பது அத்திருப்பதிகத்
திருப்பாட்டு. இவ்வரலாறுகளின் விரிவினைத்
திருத்தொண்டர் புராணத்திற் காண்க. (58)
வெம்மை
யால்விளை வஃகினும் வேந்தர்கோல் கோடிச்
செம்மை மாறினும் வறுமைநோய் சிதைப்பினுஞ் சிவன்பாற்
பொய்ம்மை மாறிய பத்தியும் *பொலிவுங்குன் றாவாத்
தம்மை மாறியும் புரிவது தருமமந் நாடு. |
(இ
- ள்.) வெம்மையால் - (மழைவறங் கூர்ந்து) கோடை
மிக்கமையால், விளைவு அஃகினும் - விளைவு குன்றினாலும், வேந்தர் கோல்
கோடி - அரசர் செங்கோல் திறம்பி, செம்மை மாறினும் - நடுவுநிலைமை
மாறினாலும், வறுமைநோய் சிதைப்பினும் - வறுமைப் பிணி வருத்தினாலும்,
சிவன்பால் - சிவபிரானிடத்து, பொய்ம்மை மாறிய பத்தியும் - பொய்ம்மை
நீங்கிய (மெய்) அன்பும், பொலிவும் குன்றாவா - (சைவ) விளக்கமுங்
குன்றாவாக, தம்மை மாறியும் - (அங்குள்ளார்) தங்களை விற்றாயினும்,
(பா
- ம்.) * பொலிவு குன்றாவாய்.
|