| 
	
	      | கொற்புட்டு 
            விடுந்திறந்து கடிதடிசில் சமைத்தியெனக் குமரி 
            தாளில்
 அற்பூட்டு மடவரலு மவ்வாறே யட்டில்புகுந்
 தடிசி 
            லாக்கி.
 |       (இ 
        - ள்.) (என்ற வளவில்), கௌரி - கௌரியம்மை, எமரங்கள் இல்பூட்டிப் போயினார் என - எம்மவர் வீட்டினைப் பூட்டிச் சென்றனர்
 என்று கூற, மேருவின் பூட்டிப் புரம் பொடித்த வேதியர் - மேருவில்லில்
 (அனந்தனாகிய நாணைப்) பூட்டித் திரிபுரத்தை நீறாக்கிய சிவபெருமானாகிய
 அந்தணர், நின் கை தொட்டுவிடுமுன் - நினது கையாற் றொட்டு விடுதற்கு
 முன்னே, யாத்த கொல் பூட்டி விடும் - பந்தித்த கொல்லனாற் செய்த பூட்டு
 நெகிழ்ந்து விடும்; திறந்து கடிது அடிசில் சமைத்தி என்ன - கதவைத்
 திறந்து விரைவில் உணவு ஆக்குவாய் என்று கூறு, குமரி தாளில் அன்பு
 ஊட்டு மடவரலும் - இறைவியின் திருவடியில் அன்பினைச் செலுத்திய
 கௌரியும், அவ்வாறே அட்டில் புகுந்து அடிசில் ஆக்கி - அங்ஙனமே
 திறந்த அடுக்களையில் நுழைந்து திருவமுது சமைத்து.
       எமரங்கள், 
        கள் என்னும் விகுதிமேல் விகுதியும் அம் சாரியையும் பெற்று முடிந்தது. விற்பூட்டி - வில்லை வளைத்து என்றுமாம். கையாற்றொடு,
 அங்ஙனம் தொட்டு விடுமுன் என விரிக்க. கொல் - கொற்றொழில், பூட்டு
 விடும் - பூட்டு யாப்பு விடும். அற்பூட்டு - அன்பினைச் செலுத்திய; அன்பு
 அற்பு என வலித்தது. (22)
 
        
	      | தையன்மா 
            தவக்கொழுந்து புறம்போந்து சிரகநீர் தளிர்க்கை தாங்கி
 ஐயனே யமுதுசெய வெழுந்தருளு மெனவெழுந்த
 வடிகள் பாதச்
 செய்யதா மரைவிளககி யந்நீர்தன் சென்னியின்மேற்
 றெளித்துப் 
            பாச
 மையன்மா சிருள்கழுவி யகம்புகுவித் தாசனமேல்
 வைத்துப் 
            பின்னர்.
 |       (இ 
        - ள்.) மாதவக் கொழுந்து தையல் - பெரிய தவக்கொழுந் தாகிய கௌரி, புறம் போந்து - வெளியே வந்து, தளிர்க்கை சிரக நீர்
 தாங்கி - தளிர்போன்ற கையிலே கமண்டல நீரையேந்தி, ஐயனே
 அமுதுசெய எழுந்தருளும் என - ஐயனே! திருவமுது செய்தற்கு
 எழுந்தருளுவீராக என்று வேண்ட, எழுந்த அடிகள் பாதம் செய்ய
 தாமரை விளக்கி - அங்ஙனமே எழுந்த பெரியாரின் திருவடியாகிய
 செந்தாமரை மலர்களை (அக் கமண்டல நீரால்) விளக்கி, அந்நீர் தன்
 சென்னியின் மேல் தெளித்து - அந்த நீரைத் தனது தலையின்மீது
 தெளித்து, பாசம் மையல் மாசு இருள் கழுவி - பாசமாகிய மயக்கத்தை
 விளைவிக்கும் மல விருளைப்போக்கி, அகம் புகுவித்து ஆசன
 மேல்வைத்து - இல்லிற் புகுவித்துத் தவிசின்மேல்
 எழுந்தருளியிருக்கச்செய்து, பின்னர் - பின்பு,
 |