பக்கம் எண் :

கான்மாறியாடின படலம்87



ஓவறு சீர்சால் காப்பிர சார
     முவமையில் சிரக்கர கருமந்
தாவறு கரகேத் திரங்கா கரணந்
     தானக மேசுத்த சாரி.

     (இ - ள்.) பாவமோடு அராகம் தாளம் இம்மூன்று பகர்ந்திடும்
முறையினால் பரதம் - பாவமும் அராகமும் தாளமுமாகிய இந்த மூன்றையுங்
கூறும் மரபினால் (அந்நூல்) பரதமென்னும் பெயரதாம்; ஆவயின் அங்கம்
உபாங்கமே பிரத்தியாங்கமே அலர் முகராகம் - அந்நூலுட் கூறப்படும்
அங்கமும் உபாங்கமும் பிரத்தியாங்கமும் தன்மை மிக்க முகராகமும்,
ஓவு அறு சீர்சால் காப்பிரசாரம் - நீங்காத சிறப்பு நிறைந்த கரப்பிரசாரமும்,
உம்மை இல் சிரக்கர கருமம் - ஒப்பில்லாத சிரக்கர கருமமும், தாவு அறு
கர கேத்திரம் கரகரணம் தானகமே சுத்தசாரி - கெடுதலில்லாத
கரகேத்திரமும் கரகரணமும் தானகமும் சுத்த சாரியும்.

     பாவம், ராகம், தாளம் என்பவற்றின் முதற் குறிப்பாகிய ப, ர, த
என்னும் மூன்றெழுத்துக்களாலாயது பரதமென்னும் பெயர்; எனவே
நாடகத்திற்கு இன்றியமையாதன இம்மூன்று மென்பது பெற்றாம். பொறி
யுணர்வாகிய சுவையும், அதுபற்றி உள்ளத்தே நிகழும் குறிப்பும், அக்
குறிப்புப் புறத்தே வெளிப்பட்டுத் தோன்றும் விறல் எனப்படும்
மெய்ப்பாடும் பாவம் என்பதில் அடங்கும்; எடுத்த பொருளுக்கியைந்த
தன்மையைப் பாவந் தோன்ற நிகழ்த்திக் காட்டுவது பாவகம் அல்லது
அவிநயம் எனப்படும். வீரச்சுவை, அச்சச்சுவை, இழிப்புச் சுவை,
வியப்புச்சுவை, இன்பச்சுவை, அவலச்சுவை, நகைச்சுவை; வெகுளிச்சுவை,
நடுவுநிலைச்சுவை எனச் சுவை ஒன்பது வகைப்படும்.

     விறல் அல்லது சத்துவம் என்பது மெய்ம்மயிர் சிலிர்த்தல், கண்ண்ா
வார்தல், நடுக்க மடுத்தல், வியர்த்தல், தேற்றம், களித்தல், விரீத்தல்,
வெதும்பல், சாக்காடு, குரற்சிதைவு எனப் பத்து வகைப்படும். வெகுண்டோன்
அவிநயம், ஐயமுற்றோ னவிநயம், சோம்பினோ னவிநயம், களித்தோ
னவிநயம்,உவந்தோ னவிநயம், அழுக்காறுடையோ னவிநயம், இன்பமுற்றோ
னவிநயம், தெய்வமுற்றோ னவிநயம், அஞ்ஞை யுற்றோ னவிநயம்,
உடன்பட்டோ னவிநயம், உறங்கினோ னவிநயம், துயிலுணர்ந்தோ னவிநயம்,
செத்தோ னவிநயம், மழை பெய்யப் பட்டோ னவிநயம், பனித்தலைப்பட்டோ
னவிநயம். வெயிற்றலைப் பட்டோ னவிநயம், நாணமுற்றோ னவிநயம்,
வருத்த முற்றோ னவிநயம், கண்ணோவுற்றோ னவிநயம், தலைநோவுற்றோ
னவிநயம், அழற்றிறமபட்டோ னவிநயம், சீதமுற்றோ னவிநயம்,
வெப்பமுற்றோ னவிநயம், நஞசுண்டோ னவிநயம் என அவிநயம் இருபத்து
நான்கு வகைப்படும்; இவற்றினியல்புகளைச் சிலப்பதிகார அரங்கேற்று
காதைக்கு அடியார்க்கு நல்லார் கூறிய உரையிற் காண்க. அராகம் - இசை;
இது மூலாதாரந் தொடங்கி ஆளத்தி எனப்பட்டு; பின்பு இசை மூலாதாரந்
தொடங்கி ஆளத்தி எனப்பட்டு; பின்பு இசை யென்றும் பண்ணென்றும்
சொல்லப்படும்; இஃது - ஆயம். சதுரம், வட்டம், திரிகோணம் என்னும்
நால்வகைப் பாலையுள் ஆயப்பாலையாய் நின்ற பதினாற் கோவையிலே
செம்பாலை, படுமலைப்பாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலை,
கோடிப்பாலை, விளரிப்பதலை, மேற்செம் பாலை எனப்பட்ட