பக்கம் எண் :

கான்மாறியாடின படலம்91



சாற்றுவித் துவற்பி ராந்தமா தியவாஞ்
     சாரிபத் தொன்பது மாகப்
போற்றிவை யனைத்து முட்படப் புட்ப
     புடத்திலக் கணமுதற் பொருள்கள்.

     (இ - ள்.) ஏற்ற திக்கிராந்தம் ஆதியாம் முப்பத்து இருவகைத்
தேசிசாரிகளும் - பொருந்திய திக்கிராந்தம் முதலாகிய முப்பத்திரண்டு
வகைப்பட்ட தேசிசாரிகளும், காற்றினும் கடுந்தேர்ச் சக்கரம் முதலாம்
ககன சாரிகைகள் ஏழைந்தும் - காற்றினும் வேகத்தை யுடைய தேர்ச்
சக்கரம் முதலாகிய ககன சாரிகைகள் முப்பத்தைந்தும். சாற்று
வித்துவற்பிராந்தம் ஆதிய ஆம் சாரி பத்தொன்பதும் ஆக -
சொல்லாநின்ற வித்துவற்பிராந்தம் முதலாகிய சாரி பத்தொன்பதுமாக,
போற்று இவை அனைத்தும் உட்பட - சொல்லப்பட்ட இவை யனைத்தும்
அகப்பட, புட்பபுடத்து இலக்கணம் முதல் பொருள்கள் - புட்பபுடத்தின்
இலக்கணங்களாகிய முதன்மையுள்ள பொருள்களாம். (12)

ஆசவாத் தியமுன் பொருண்முதற் களாச
     மாதியாம் பாடபே தங்கள்
பேசின பதினா றொன்பதும் படக
     பேதமொன் றொழிந்தநா லைந்தும்
மாசறு மளக மாதியாம் பாட
     வகைகணா லேழுமற் றவற்றிற்
பூசல்வார்த் திகந்தொட் டைவகைச் சச்ச
     புடாதியாந் தாளமாத் திரையும்.

     (இ - ள்.) ஆசவாத்தியம் முன் பொருள் முதல்களாசம் ஆதியாம்
பாடபேதங்கள் பேசிய பதினாறு ஒன்பதும் - ஆச வாத்தியமும் முன்
பொருளும் முதன்மையாகிய களாசமும் முதலாகிய பாட பேதங்கள்
கூறப்பட்ட இருபத்தைந்தும், படக பேதம் ஒன்று ஒழிந்த நாலைந்தும் - படக
பேதங்கள் பத்தொன்பதும், மாசு அறும் அளகம் ஆதியாம் பாட வகைகள்
நாலேழும் - குற்றமற்ற அளகம் முதலாகிய பாடவகைகள் இருபத் தெட்டும்,
அவற்றில் - அவைகளுள், பூசல் வார்த்திகம் தொட்டு ஐவகைச் சச்சபுட
ஆதியாம் தாள மாத்திரையும் - பூசல் வார்த்திகந் தொட்டு ஐந்துவகைப்பட்ட
சச்சபுட முதலாகிய தாள மாத்திரைகளும்.

     இதிற் கூறப்பட்டன வாத்திய வகைகள் போலும். (13)

கிளந்தமாத் திரையின் கதிகளுஞ் சொல்லுங்
     கீதமும் பாடமு மெழுத்தும்
வளந்தரு மணிபந் தாதிகீ தத்தின்
     வகுத்தகட் டளையெழு நான்கும்