பக்கம் எண் :

புராண வரலாறு141



          புராண வரலாறு

          [கலிவிருத்தம்]

அளந்தி டற்கரி தாயவக் குன்றின்மேற்
கள்ங்க றுத்துவிண் காத்தவன் கோயின்முன்
விளம்ப ருஞ்சிவ தீர்த்தத்தின் மிக்கதாய்
வளம்பெ றுஞ்சிவ தீர்த்தத்தின் மாடது.

     (இ - ள்.) அளந்திடற்கு அரிது ஆய - அளப்பதற்கு அரிய
பெருமையையுடைய, அக்குன்றின்மேல் - அத் திருக்கைலாய மலையின்
கண், களம் கறுத்து விண்காத்தவன் கோயில்முன் - திருமிடறு கறுத்துத்
தேவர்களை ஆண்ட இறைவனது திருக்கோயிலின் முன்னர், விளம்பு
அரும் - சொல்லுதற்கரிய, சிவ தீர்த்தத்தின் மிக்கதாய் - சிவ தீர்த்தங்களின்
மேம்பட்டதாய், வளம்பெறும் - வளம்பெற்ற, சிவதீர்த்தத்தின் மாடது - சிவ
தீர்த்தத்தின் பக்கத்திலுள்ளது எ - று.

     நஞ்சுண்டதனைக் 'களங்கறுத்து' எனக் கூறினார்; அது
திருமிடற்றினின்று என்னும் அவனது இறைமையைத் தோற்றுவித்தலின்.
கோயின் முன் வளம் பெறும் எனக் கூட்டுக. விளம்பு : முதனிலைத்
தொழிற் பெயர்; விளம்ப என்பது தொக்கதுமாம் பல தலங்களிலுமுள்ள
சிவசம்பந்தமுடைய தீர்த்தங்களை முதலிலுள்ள சிவதீர்த்தமென்பது
குறிக்கின்றது; பின்னுள்ளது பெயர். மாடது மண்டபம் என வருஞ்
செய்யுளோடு கூட்டி முடிக்க. (1)

தண்ட ருங்கதிர்ச் சந்திர காந்தத்திற்
பண்ட யங்க* நவமணி பத்திசெய்
தண்டர் தச்ச னநேக தவஞ்செய்து
கண்ட தாயிரக் கான்மண் டபமரோ.

     (இ - ள்.) தண்டரும் கதிர் - நீங்குதல் இல்லாத ஒளியினையுடைய,
சந்திரகாந்தத்தில் - சந்திர காந்தக் கற்களினால், பண் தயங்க - ஒப்பனை
விளங்க, நவமணி - ஒன்பது மணிகளையும், பத்திசெய்து - வரிசைப் படப்
பதித்து, அண்டர் தச்சன் - தேவர்கள் தச்சன். அநேக தவம் செய்து
கண்டது - அளவிறந்த தவஞ்செய்து கட்டியது, ஆயிரங்கால் மண்டபம் -
ஆயிரங் கால்களையுடைய மண்டபம் எ - று.

     சந்திர காந்தத்திற் கண்ட தென்க. கண்டது - இயற்றியது : கருத்தால்
நிருமித்தலின் கண்டது என்றார் எனலுமாம். மாடது, கண்டது என்பவற்றை
மண்டபம் என்பதனுடன் தனித்தனி கூட்டுக; கண்டதாகிய மண்டபம் மாடது
என முடித்தலுமாம். அரோ : அசை.

ஆன பான்மையி னாலந்த மண்டபம்
ஞான நாயக னாண்மலர்த் தாடொழ
வான மீனொடு வந்து பதங்குறித்
தூன மின்மதி வைகுவ தொத்ததே.


     (பா - ம்.) * பண்டயங்கு.