பக்கம் எண் :

திருமணப் படலம்347



5. திருமணப்படலம்

[அறுசீரடியாசிரிய விருத்தம்]
தரைபுகழ் தென்னன் செல்வத் தடாதகைப் பிராட்டி தானே
திரைசெய்நீர் ஞாலங் காத்த செயல்சிறி துரைத்தேன் றெய்வ
விரைசெய்பூங் கோதை மாதை விடையவன் மண்ந்துபாராண்
டரசுசெய் திருந்த தோற்ற மறிந்தவா றியம்ப லுற்றேன்.

     (இ - ள்.) தரை புகழ் தென்னன் செல்வத் தடாதகைப் பிராட்டி -
புவியிலுள்ளார் புகழும் மலயத்துவச பாண்டியன் புதல்வி யாராகிய
செல்வத்தையுடைய தடாதகைப் பிராட்டியார், தானே - தாம் தனிமையாக,
திரைசெய் நீர் ஞாலம் காத்த செயல் சிறிது உரைத்தேன் - மலைகளை
வீசும் கடல் சூழ்ந்த நிலவுலகைப் புரந்தருளிய திருவிளையாடலைச் சிறிது
கூறினேன்; தெய்வ விரை செய் பூங்கோதை மாதை - தெய்வ மணம் வீசம்
மலரையணிந்த கூந்தலையுடைய அப்பிராட்டியாரை, விடையவன் மணந்துபார்
ஆண்டு - இடப வாகனத்தையுடைய சிவபெருமான் திருமணஞ் செய்தருளி
அந்நிலவுலகை ஆண்டு, அரசுசெய்து இருந்த தோற்றம் அறிந்தவாறு
இயம்பலுற்றேன் - அரசியல் நடாத்திய திருவிளையாடலை அறிந்த வண்ணம்
கூறுகின்றேன் எ - று.

     தென்னன் புதல்வியாராகிய என விரித்துக்கொள்க. பெண்ணர
சாகவிருந்து ஆண்ட பெருமை தோன்றத் ‘தானே காத்த’ என்றார். அரசியல்
நடாத்து முறைமையிதுவெனக் காட்டுவார் போன்று ஆண்டன ரென்பார்
‘பாராண்டு’ என அமையாது, ‘அரசு செய்திருந்த தோற்றம்’ எனவுங் கூறினார்.
முழுதும் அறியவாரா தென்பார் ‘அறிந்தவாறு’ என்றார். (1)

காயிரும் பரிதிப் புத்தேள் கலியிருள் துமிப்பச் சோதி
பாயிருங் குடைவெண் டிங்கட் படரொளி நீழல் செய்ய
மாயிரும் புவன மெல்லா மனுமுறை யுலக மீன்ற
தாயிளங் குழவி யாகித் தனியர சிருக்கு நாளில்.

     (இ - ள்.) காய் இரும் பரிதிப் புத்தேள் - ஒளிவீசும் பெரியதிகிரி
யாகிய சூரியதேவன், கலி இருள் துமிப்ப - துன்பமாகிய இருளைக்
கெடுக்கவும், சோதிபாய் இருகுடை வெண் திங்கள் - ஒளிபரந்த பெரிய
குடையாகிய வெள்ளிய சந்திரன், படர் ஒளி நீழல் செய்ய - படர்ந்த
ஒளியாகிய நிழலைச் செய்யவும், மா இரும் புவனம் எல்லாம் - பெரிய
உலகங்களை எல்லாம். மனுமுறை - மனுநூல் வழி, உலகம் ஈன்ற தாய் -
அவ் வுலகங்களைப் பெற்றருளிய உமையம்மை, இளங் குழவியாகி -
இளமையாகிய கன்னியா யிருந்து, தனி அரசு இருக்கும் நாளில் -
தனிமையாக ஆட்சி புரியுங்காலத்தில் எ - று.


     (பா - ம்.) * தனியரசளிக்கு நாளில்.