பக்கம் எண் :

6திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



பெறுவர்; பிணிவந்து எய்தார் - நோய்கள் வற்து அடையப் பெறார்; வாழ்
நாளும் நனி பெறுவர் - நீண்ட ஆயுளையும் பெறுவர்; வான் நாடு எய்தி -
விண்ணுலகிற் சென்று, புங்கவராய் - தேவராய், அங்கு உள்ள போகம் மூழ்கி
- அங்குள்ள இன்பங்களை மிக நுகர்ந்து, புண்ணியராய் - சிவபுண்ணியம்
உடையவராய், சிவன் அடிக்கீழ் - சிவபெருமான் திருவடி நீழலில், நண்ணி
வாழ்வார் - இரண்டறக் கலந்து வாழ்வார் - இரண்டறக் கலந்து வாழ்வார்,
எ - று.

     திங்களணி அண்ணலென இயைக்க. திருவிளையாட்டு என்றது
அதனைக் கூறும் நூலுக்காயிற்று. இறைவன் செய்யுஞ் செயலெல்லாம் எளிதின்
முடிதனோக்கி அவற்றை அவனுடைய விளையாட்டுக்கள் என்ப;

"காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி"

என்னும் திருவாசகமும்,

"சொன்னவித் தொழில்க ளென்ன காரணந் தோற்ற வென்னின்
முன்னவன் விளையாட் டென்று மொழிதலுமாம்"

என்னும சிவஞான சித்தித் திருவித்தமும் நோக்குக. சங்கம், பதுமம்
என்பன சில வேரெண்கள்; அவ்வளவினையுடைய நிதிகள் சங்கநிதி,
பதுமநிதி எனப்படும்; சங்கு போலும் தாமரை போலும் வடிவினையுடைய
நிரிகள் எனச் கூறுவாரு முளர். இவை குபேரனிடத்திலுள்ளன வென்பர்.
திருநாவுக்கரசரும் ‘சங்கநிதி பதுமநிதி யிரண்டுந்தந்து’ என அருளிச்
செய்தல் காண்க. வாழ்நாளு நனிபெறுவர் என்பதுகாறும் இம்மைப் பயனும்,
புங்கவரா யங்குள்ள போக மூழ்கி என்பதனால் மறுமைப் பயனும், சிவனடிக்
கீழ் நண்ணி வாழ்வார் என்பதனால் முத்திப் பயனும் முறையே கூறப்பட்டன.
இச் செய்யுளில், திருவிளையாட்டிவை என்பதனால் நுதலிய பொருளும்,
அன்பு செய்து கேட்பார் என்பதனால் கேட்டற்குரிய அதிகாரியும், பிறவற்றால்
கேட்போ ரெய்தும் பயனும் பெறப்பட்டமை காண்க. (2)


கடவுள் வாழ்த்து

சி வ ம்

[அறுசீரடியாசிரிய விருத்தம்]

வென்றுளே புலன்க ளைந்தார் மெய்யுண ருள்ளந் தோறுஞ்
சென்றுளே யமுத மூற்றுந் திருவருள் போற்றி யேற்றுக்
குன்றுளே யிருந்து காட்சி கொடுத்தருள் கோலம் போற்றி
மன்றுளே மாறி யாடு மறைச்சிலம் படிகள் போற்றி.

     (இ - ள்.) உள்ளே புலன் வென்று களைந்தார் - அகத்தின்கண்
புலன்களை வென்று போக்கினவரின், மெய் உணர் - மெய்ம்மையை
உணர்ந்த, உள்ளம் தோறும் - இதயங்கள் தோறும், சென்று - போய்,
உள்ளே - அவர்கள் அறிவினுள்ளே, அமுதம் ஊற்றும் - அமிழதத்தைச்
சொரிகின்ற,