பக்கம் எண் :

பாண்டியன் சுரந் தீர்த்த படலம்389



அறுபத்திரண்டாவது பாண்டியன் சுரந்தீர்த்த படலம்

             [அறுசீரடியாசிரிய விருத்தம்]
வான லமுத மதிமுடிமேன் மதுரைப் பெருமான் மண்சுமந்து
தேன லமுத வாசகரைக் கதியில் விடுத்த திறனிதுமேற்
பானன் மணிவாய்க் கவுணியனை விடுத்துச் சமணர் படிற்றொழுகுங்
கூனல் வழுதி சுரந்தணித்தாட் கொண்ட கொள்கை கூறுவாம்.

     (இ - ள்.) மதுரைப் பெருமான் - திருவாலவாயில் எழுந்தருளிய
சோம சுந்தரக் கடவுள், வான் நல் அமுத மதி முடிமேல் - வானின் கண்
உலவும் குளிர்ந்த அமிழ்தினையுடைய சந்திரனைத் தரித்த முடியின் மேல்,
மண் சுமந்து - மண்ணைச் சுமந்து, தேன் நல் அமுத வாசகரை - தேனும்
அமிழ்தமும் போலும் இனிய திருவாசக முடைய மணிவாசகனாரை, கதியில்
விடுத்த திறன் இது - வீட்டுலகிற் செலுத்திய திருவிளையாடல் இது; மேல் -
இனி, பால் நல்மணிவாய்க் கவுணியனை விடுத்து - பால் மண மறாத நல்ல
அழகிய திருவாயினையுடைய ஆளுடைய பிள்ளை யாரை விடுத்து, சமணர்
படிற்று ஒழுகும் கூனல் வழுதி சுரம் தணித்து - சமணர்களின் பொய்
நெறியில் ஒழுகும் கூன் பாண்டியனுடைய வெப்பு நோயைத் தணித்து, ஆட்
கொண்ட கொள்கை கூறுவாம் - அடிமை கொண்டருளிய
திருவிளையாடலைக் கூறுவோம். வான் அல் எனப் பிரித்து இரவில்
இயங்கும் மதி என்பாருமுளர். சுவை மிகுதியால் தேனையும் உறுதி
பயத்தலால் அமிழ்தையும் போலும் வாசகம் என்க.

"பானல் வாயொரு பாலனீங்கிவ னென்றுநீ பரிவெய்திடேல்"

என்று பிள்ளையார் மங்கையர்க்கரசியாரை நோக்கிச் கூறுதலானும் பால்
மணம் நீங்காத வாய் என்பது கடைப்பிடிக்க. கவுணியன் என்றது
கோத்திரத்தாற் பெற்ற பெயர். இது பிள்ளையார் புரிந்த செயலேனும்
இறைவனருள் பெற்றுச் சென்று செய்தமையின் இறைவனது
திருவிளையாடலாகக் கொண்டு ‘கவுணியனை விடுத்து வழுதி சுரந்தணித்தாட்
கொண்ட’ என்று கூறினார். (1)

வாகு வலத்தான் சகநாத வழுதி வேந்தன் மகன்வீர
வாகு வவன்சேய் விக்கிரம வாகு வவன்சேய் பராக்கிரம
வாகு வனையான் மகன்சுரபி மாற* னனையான் றிருமைந்தன்
வாகு வலத்தான் மறங்கடிந்து மண்ணா ளுங்குங் குமத்தென்னன்.

     (பா - ம்.) * சுரதமாறன்.