பக்கம் எண் :

வன்னியுங் கிணறு மிலிங்கமு மழைத்த படலம்461



அறுபத்து நான்காவது வன்னியுங் கிணறும் இலிங்கமு
மழைத்த படலம்.

              [எழுசீரடியாசிரிய விருத்தம்.]
சென்னிவெண் டிங்கண் மிலைச்சிய மதுரைச் சிவனரு ளடைந்தசம்
                                           பந்தர்
துன்னிருஞ் சமணைக் கழுமுனை யேற்றித் துணித்தவா றிசைத்தனம்
                                           வணிகக்
கன்னிதன் மன்றற் கரியினை மாற்றாள் காணவக் கண்ணுத லருளால்
வன்னியுங் கிணறு மிலிங்கமு மாங்கு வந்தவா றெடுத்தினி
                                          யுரைப்பாம்.*

     (இ - ள்.) சென்னி வெண் திங்கள் மிலைச்சிய - முடியின்கண்
வெள்ளிய பிறையை யணிந்த, மதுரைச் சிவன் அருள் அடைந்த சம்பந்தர் -
மதுரைப் பதியில் எழுந்தருளிய சோமசுந்தரக் கடவுளின் திருவருளைப்
பெற்ற திருஞானசம்பந்தர், துன் இருள் சமணை - செறிந்த கூட்டமாகிய
சமணர்களை, கழுமுனை ஏற்றி - கழுநுனியில் ஏற்றி, துணித்தவாறு
இசைத்தனம் - துண்டித்த திருவிளையாடலைக் கூறினேம்; வணிகக்கன்னி
தன் மன்றல் கரியினை - ஓர் வணிகமகளின் மணச் சான்றினை, மாற்றாள்
காண - அவள் மாற்றாள் காணுமாறு, அக்கண்ணுதல் அருளால் -
அவ்விறைவன் திருவருளால், வன்னியும் கிணறும் இலிங்கமும் -
வன்னிமரமும் கேணியும் சிவலிங்கமும், ஆங்குவந்தவாறு - அங்கு வந்த
திருவிளையாடலை, இனி எடுத்து உரைப்பாம் - இனி எடுத்துக் கூறுவாம்.

     சமண், குழூஉப் பெயர். வென்றவர் சம்பந்தராகலின் 'சம்பந்தர் ...
கழுமுனை யேற்றித் துணித்தவாறு' என உபசரித்துக் கூறினார். (1)

பொன்மலர்க் கைதை வேலிசூழ் வேலைப் புறத்தொரு பட்டினத்
துள்ளான்
பொன்மலர்க் கொடும்பூ ணொருகுல வணிகன் வேறுவே றாம்பல
                                             செல்வத்
தன்மையிற் சிறந்தோன் மகவில னாகித் தன்மனக் கினியதோர்
                                             காட்சி
நன்மனைக் கொடியோ டறம்பல புரிந்தோர் நகைமதிக் கொம்பையீன்
                                            றெடுத்தான்.

     (இ - ள.) பொன்மலர்க் கைதை வேலிசூழ் - பொன்போலு
மலரையுடைய தாழையாகிய வேலிசூழ்ந்த, வேலைப் புறத்து ஒரு பட்டினத்து
உள்ளான் - கடற்கரையிலுள்ள ஒரு பட்டினத்திலுள்ளவனாகிய, மின்மணிக்
கொடும்பூண் ஒரு குலவணிகன் - ஒளிபொருந்திய மணிகளழுத்திய வளைந்த
அணிகளை யணிந்த சிறப்புடைய வணிகனொருவன், வேறு வேறு ஆம் பல
செல்வத் தன்மையில் சிறந்தோன் - வெவ்வேறு வகையாகிய பல
செல்வங்களின் மிக்கோனா யிருந்தான்; மகவு இலனாகி - அவன்
மகப்பேறில்லாதவனாய், தன் மனக்கு இனியதோர் காட்சி - தன் மனத்துக்கு
இனியதொரு தோற்றத்தையுடைய, நல்மனைக் கொடியோடு - நல்ல மனைக்
கிழத்தியுடனே, பல அறம் புரிந்து - பலவகை அறங்களைப் புரிந்து, ஓர்
நகை மதிக் கொம்பை ஈன்று எடுத்தான் - ஒளிபொருந்திய மதியை ஏந்திய
பூங்கொம்புபோன்ற ஒரு புதல்வியைப் பெற்றெடுத்தான்.


     (பா - ம்.) * எடுத்தினி துரைப்பாம்.