|
(நீராகி), காளையர்
- இளைஞர்களின் - செவிக்கால் ஓடி - செவியாகிய
காலின் வழியே சென்று, வெவ்விய - கொடிய, காமப் பைங்கூழ் -
காமமாகிய பயிரானது, விளைதர வளர்க்கும் - விளையும்படி (அதை)
வளர்க்கும் எ - று.
ஒளவியமுடைய
கண்ணாரென்க; கண்ணெனினுமாம். கண்ணாரின்
விரலென விரித்தலுமாம். விரலால் நடாத்தலாவது ஆராய்ந்து வாசித்தல்.
திவ்வியய்ம - தெய்வத்தன்மை, இனிமை. நரம்பு - நரம்பின் இசை. எழால் -
மிற்றுப்பாடல். நரம்பும் எழாலும் தம்மிற் கௌவியியங்குதலை,
"வீழ்மணி வண்டுபாய்ந்து மிதித்திடக் கிழிந்த மாலை
சூழ்மணிக் கோட்டு வீணைச் சுகிர்புரி நரம்பு நம்பி
ஊழ்மணி மிடறு மொன்றாய்ப் பணிசெய்த வாறு நோக்கித்
தாழ்மணித் தாம மார்பிற் கின்னரர் சாம்பி னாரே" |
என்னுஞ் சிந்தாமணிச்
செய்யுளானு மறிக. நீரவாகி யென்பது இரட்டுற
மொழிதலால் தன்மையவாகி யென்றும், நீராகி யென்றும் பொருள் படும். நீர்
என்னும் பொருளில் அகரம் சாரியை. கால்வழி - வாய்க்கால். உள்ளத்தை
நிலமாகக்கொள்க. 'வெவ்வியகாமம்' என்றார்;
"ஊரு ளெழுந்த வுருகெழு செந்தீக்கு
நீருட் குளித்து முயலாகும் - நீருட்
குளிப்பினுங் காமஞ் சுடுமேகுன் றேறி
ஒளிப்பினுங் காமஞ் சுடும்" |
என்பவாகலின். இசையால்
காமம் மிகுமென்பதாயிற்று. அன்று,
ஏ : அசை. (52)
கட்புல னாதி யைந்து முவப்புறக்* கனிந்த காமம்
விட்புலத் தவரே யன்றி வீடுபெற் றவரும் வீழ்ந்து
பெட்பமுற் றமுதுங் கைப்பப் பெருங்குலக் கற்பி னார்போல்
நட்பிடைப் படுத்தி விற்கு நல்லவ ரிருக்கை யீதால். |
(இ
- ள்.) விண்புலத்தவரே அன்றி - தேவர்களே அல்லாமல், வீடு
பெற்றவரும் - பாச நீக்கம்பெற்ற சீவன்முத்தர்களும், வீழ்ந்து - விரும்பி,
பெட்பம் உற்று - மயல் மிகுந்து, அமுதும் கைப்ப - (தத்தமக் குரிய)
அமுதங்களையும் வெறுக்கும்படி, கனிந்த காமம் - முதிர்ந்த காம
நுகர்ச்சியை. கண்புலன் ஆதிஐந்தும் உவப்புற - (ஆடவர்களின்) கண்
முதலிய ஐந்து புலன்களும் ஒருசேர இன்பமெய்த, பெரும் குலக் கற்பினார்
போல் - பெருமை பொருந்திய உயர்குடியிற் பிறந்த கற்புடைப் பெண்டிர்
போல, நட்பு - தமது நட்பின்கண், இடைப் படுத்தி - (அவர்களை)
அகப்படுத்தி, விற்குநல்லவர் - விற்கின்ற பரத்தையர்களின், இருக்கை ஈது -
இருப்பிடம் இத்தன்மையாது எ - று.
"கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு
மைம்புலனும்
ஒண்டொடி கண்ணே யுள" |
(பா
- ம்.) * உவர்ப்பறக்.
|