I


116திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



முகத்தினும் மார்பினும் பட்ட புண்ணை விழுப்புண் என்பவாகலின்,
புறங்கொடார் என்பது கருத்து. தம் முயிர்க் கிரங்காமையின் 'தமக்கன்
பில்லார்' எனப்பட்டார். மானவாற்றாலொழுகுதலாவது தாழ்வுவரின் உயிரை
விடுதல்,

"மயில்நீப்பின் வாழாக் கவரிமா வன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்"

என்றார் வள்ளுவனாரும். விஞ்சை பயில்என ஒட்டலுமாம். காட்சித்து :
குறிப்பு முற்று. எங்கும் : எழுவாய்; பன்மை யொருமைமயக்கம். (75)

மின்னைவா ளென்ன வீசி வீங்குகார் தம்மிற் போர்மூண்
டென்னவான் மருப்பு நீட்டி யெதிரெதிர் புதையக் குத்தி
அன்னவா னென்ன வாய்விட் டதுவெனச் செந்நீர் சோரப்
பொன்னவா மகன்ற மார்பர் பொருகளி றாட்டு வார்கள்.

     (இ - ள்.) வீங்கு கார் - சூல் முதிர்ந்த முகில்கள், மின்னை வாள்
என்ன வீசி - மின்னலை வாள்போல வீசி, தம்மில் போர் மூண்டென்ன -
தம்முள் போர் மூண்டுசெய்தாற்போல, பொரு களிறு - போர் செய்யும்
யானைகள், வால் மருப்பு - வெள்ளிய தந்தங்களை, எதிர் எதிர் நீட்டி -
எதிரேதிரே நீட்டி, புதையக் குத்தி - (உடலில்) மூழ்கும்படி குத்தி,
அன்னவான் என்ன - அந்த மேகம் சொரியும் தாரைபோல, செந்நீர் சோர
- குருதித் தாரை சொரியும்படி, பொன் அவாம் - திருமகளும் விரும்பும்
படியான, அகன்ற மார்பர் - விரிந்த மார்பினையுடைய வீரர்கள் (அவ்
யானைகளை),, ஆட்டுவார்கள் - போர் செய்விப்பார்கள் எ - று.

     மூண்டென்ன : விகாரம். அன்ன : சுட்டு. மேக மென்னும்
பொருண்மைபற்றி 'அது' என்று ஒருமையாற் கூறினார். சோர - சொரிய
என்னும் பொருட்டு. அவாவும் என்பது அவாம் என விகார மாயிற்று.
அவாவும் மார்பு, அகன்ற மார்பு எனத் தனித்தனி கூட்டுக. நீட்டி என்பது
முதலியன களிற்றின் வினைகள். (76)

தூண்டுவா ருளமுந் தங்கள் பின்னிடத் துவக்குண் டீர்த்துத்
தாண்டுமா னொற்றை யாழித் தேரினுந் தள்ளித் துள்ளப்
பாண்டில்வாய்ப் பசும்பொன் றேயப் பார்மகள் முதுகு கீண்டு
சேண்டிசை போய்ம டங்கச் செல்வத்தேர் நடாந்து வார்கள்.

     (இ - ள்.) தூண்டுவார் உளமும் - செலுத்துகின்றவர்களின்
மனோவேகமும், தங்கள் பின்னிட - தங்கள் வேகத்திற்குப் பின்னிடும்படி,
துவக்குண்டு ஈர்த்துத் தாண்டுமான் - கட்டப்பட்டு இழுத்துத் தாவுகின்ற
குதிரைகள், ஒற்றை ஆழித் தேரினும் - ஓருருளையையுடையய சூரியன்
தேரிற் பூட்டியய குதிரைகளை விட, தள்ளித்துள்ள - விரைந்து ஓடவும்,
பாண்டில் வாய் - உருளையின்கண் உள்ள; பசும்பொன் தேய - பசிய
பொன் தேயும்படியாகவும், பார்மகள் முதுகு கீண்டு - புவி மடந்தையின்
முதுகைக் கிழித்து, சேண் திசை போய் மடங்க - வானத்தினுந்
திசைகளினும் போய் மீளும்படி, செல்வத்தேர் நடாத்துவார்கள் - சிறந்த
தேர்களை நடாத்துவார்கள் (அவ்வீரர்கள்) எ - று.