|
சொல்வாம் - செல்வர்களாகிய
மறையவரின் வீதியின் பெருமையைச்
சொல்வாம் எ - று.
ஆத்திகர்
- உண்டென்பார்; மறுபிறப்பும் இருவினைப்பயனும்
கடவுளும் உண்டென்பார், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற்
பொருளும் உண்டென்பார், மற்றும் இத்தன்மைய மெய்ம்மைகள்
உண்டென்பார். நாத்திகர் - இல்லையென்பார்; ஆத்திகர்க்கு மறுதலை
யாயினார்; இவர் உலகாயதர் முதல் பலதிறப்படுவர்; 'காண்ட லளவை
ஒன்றே பிரமாணம்; காணப்படும் நிலம் நீர் தீ வளியென நான்கே
தத்துவங்கள்; இவை நித்தப் பொருள்கள்; இவற்றின் கூட்டமே உடம்பு;
பாகடையுஞ் சுண்ணாம்புங் கூடியவழிச் செவ் வண்ணம் பிறக்குமாறு போல
இவற்றின் கூட்டரவின் ஓருணர்வுண் டாம்; அவ்வுணர்வு உடம்பு வளர
வளரும்; தேயத் தேயுமாகலின், உடம்பிற்கு வேறே உயிரென்பது பொய்.
உடம்பிற்கு இன்பத் துன்பங்கள் இயல்பாயுள்ளன; இவற்றிற்குக் காரணம்
வினையென்பதும் பொய்; மயலைச் சித்திரித்தாரையும் குயிலைக்
கூவுவித்தாரையும் காணமையிற் கடவுளுண்டென்பதும் பொய்' என்றிங்ஙனங்
கூறுவார் உலகாயதராவர். ஆத்தன் - உணமையுரைப்போன் நண்பன்;
இங்கே பரமாத்தனாம் சிவபெருமான். வேட்குஞ் செல்வர் - வேட்டலாகிய
செல்வத்தினையுடையார் என்றுமாம். (82)
முஞ்சிநாண் மருங்கின் மின்னப்
பொன்செய்த முளரி வேய்ந்த
குஞ்சிநான் றசையத் தானைச்
சொருக்குமுன் கொய்து தூங்கப்
பஞ்சினாண்* கலைத்தோல் மார்பும்
பலாசக்கோல் கையுந் தாங்கி
எஞ்சினான் மறை +நூல் கற்போர்
கிடைகளே யில்ல மெல்லாம். |
(இ
- ள்.) முஞ்சி நாண் - முஞ்சிப் புல்லாலாகிய கயிறு, மருங்கில்
மின்ன - அரையின்கண் ஒளிவிடவும், பொன் செய்த - பொன்னாற்
செய்யப்பட்ட, முளரி வேய்ந்த - தாமரை மலரை அணிந்த, குஞ்சி நான்று
அசைய - சிகையானது தொங்கி அசையவும், தானைச்சொருக்கு -
ஆடையின் சொருகல், முன்கொய்துதூங்க - முன்னே கொய்யப்பட்டுத்
தொங்கவும், கலைத் தோல் பஞ்சின் நாண் - மான்றோலைக் கட்டியபஞ்சி
னாலாகிய பூணூலை, மார்பும் - மார்பிலும், பலாசக்கோல் - முள்முருக்கங்
கோலை, கையும் தாங்கி - கையிலுங் கொண்டு, எஞ்சு இல் - குறைவு
இல்லாத, நான்மறைநூல் கற்போர் - நான்குமறைகளாகிய நூல்களைக்
கற்கின்ற மாணவகரின், கிடைகளே இல்லம் எல்லாம் - சாலைகளேயாம்
(அவ்வீதியிலுள்ள) வீடுகளனைத்தும் எ - று.
முஞ்சி
- ஒருவகை நாணற்புல். தானைச் சொருக்கு - கொய்சகம்.
மறை நூல் - மறையும் நூலும் என்றுமாம். கிடை - வேதமோ துஞ் சாலை.
முஞ்சி நாண் முதலியன பிரமசாரிக்குரியன. பஞ்சி, எஞ்சி என்னும்
(பா
- ம்.) * பஞ்சிநாண். +எஞ்சி நான்மறை.
|