|
ஒலி செய்யும் ஆண்
வண்டானது, கற்பகம் - கற்பகச் சோலையிலுள்ள,
மதுக் கொணர்ந்து - தேனைக் கொண்டுவந்து, உவந்து ஊட்டி - மகிழ்ந்து
உண்பித்து, தழல் செய் காமம் - வெம்மையைச் செய்கின்ற காமத்தை
யுடையய, மென்பேடையின் - மென்மையான பெண்வண்டின், ஊடல் நோய்
தணிக்கும் - புலவித் துன்பத்தை ஆற்றும் எ - று.
உழல்
- முதனிலைத் தொழிற்பெயர். உயிர்க்கெலாம் - உயிர்
எல்லாவற்றுக்கும் என உருவினை மாற்றுக. தீவினையின் உருப்பற எனவும
அடியாகிய நிழல்செய்வார்க்கு எனவும், அடியினால் நிழல் செய்வார்க்கு
எனவும் விரித்தலுமாம். உயிர்க்கெலாம் நிழல் செய்வார்க்கு நிழல் செயா
நின்றதென ஓர் வியப்புத்தோன்றக் கூறியவாறு. செயாநின்ற - செய்கின்ற
வென ஒரு சொல்லுமாம். கடம்பிலுள்ள வண்டினைக் கடம்பின் வண்டு
என்றார். தொடர் புயர்வு நவிற்சியணி.
(95)
ஆரு நீர்க்கட லன்றது வெனநிறை யகழ்கார்
ஊரு மாழியன் றதுவென வோங்கெயி லெட்டாய்ச்
சாரு நேமியன் றதுவெனச் சமைந்தகோ புரம்பொன்
மேரு வன்றது வெனச்சுடர் விண்ணிழி விமானம். |
(இ
- ள்.) ஆரும் நீர்க்கடல் - நிறைந்த நீரினையுடைய கடல் அது
அன்று (இது) என - அதுவன்று இதுதான் என்று சொல்லும்படி, நிறை அகழ்
- நீர் நிறைந்த அகழியும், கார் ஊரும் ஆழி - மேகந் தவழ்கின்ற
சக்கரவாளகிரி, அது அன்று (இது) என - அதுவன்று இது தான் என்று
கூறும்படி, ஓங்கு எயில் - உயர்ந்த மதிலும், எட்டாய்ச் சரரும் நேமி -
எட்டாய்ப் பொருந்திய மலைகள், அது அன்று (இவை) என - அவையல்ல
இவைதான் என மொழிய, சமைந்த கோபுரம் - அமைந்த கோபுரங்களும்,
பொன் மேரு - பொன் மயமாகிய மேருமலை, இழி சுடர் விமானம் -
வானுலகத்தினின்றும் இறங்கிய ஒளி பொருந்திய விமானமும் (அங்கு
உள்ளன) எ - று.
அன்றது
என வருவனவற்றை அது அன்று என மாற்றியும், இது
என்பதனை அருத்தாபத்தியாற்கொண்டும் உரைக்கப்பட்டது. எட்டாய்ச் சாரு
நேமியன்று என்புழிப் பன்மை யொருமை மயக்கம். மலை யென்னும்
பொதுமை நோக்கி அதுவென்றார் எனலுமாம். மலை யெட்டாவன : இமயம்,
ஏமகூடம், கந்தமாதனம், கைலை, நிடதம், நீலகிரி, மந்தரம், விந்தம் என்பன.
குலமலை ஏழென்பார் கந்தமாதனம் ஒழியக் கொள்வார். பயனிலை தொக்கு
நின்றது. இது தற்குறிப்பணியின் பாற்படும்.
(96)
வேத வந்தமுந் துளக்கற மெய்ப்பொருள் விளங்கும்
நாத வந்தமுங் கடந்ததோர் நடுநிலைப் பொருளின்
பாத வந்தனைப் பத்தியின் பாலராய்ப் பயில்வோர்
மாத வந்தரு பயனெனத் தழைத்தபல் வளனும்.
|
(இ
- ள்.) வேத அந்தமும் - வேத முடிவையும், துளக்கு அற -
கலக்கமின்றி, மெய்ப்பொருள் விளங்கும் - மெய்ப்பொருள் விளங்குதற்
|