|
(இ
- ள்.) புண்ணியம் புரி பூமி பார் - அறஞ் செய்தற்கு
இடமாயுள்ளது புவியாம். அதில் வருபோகம் நண்ணி - அவ்வறத்தால்
விளையும் பயனைப் பெற்று, இன்பு உறு பூமி வானாடு - இன்பத்தை
யடைதற்கு இடமாயுள்ளது வானுலகமாம், என்ப - என்று சொல்லுவர்
நூலோர்; நாளும் - எப்போதும், புண்ணியம் புரி பூமியும் - அறஞ்
செய்தற்கு இடமாயுள்ளதும், அதில் வரு போகம் நண்ணி - அதனால்
வருகின்ற போகத்தைப் பொருந்தி, இன்பு உறு பூமியும் - இன்பத்தை
யடைதற்கு இடமாயுள்ளதும், மதுரைமா நகரம் - இம் மதுரை மாநகரமே
ஆகும் எ - று.
பூமி
என்பன இடம் என்னும் பொருளன. அதில் - அதனால்.
புண்ணியம், போகம் என்பன சாதி யொருமைகள். சொல்லும் பொருளும்
முன் வந்தனவே பின்னும் வருதலின் இது சொற்பொருட்
பின் வருநிலை யணி. (103)
|
[அறுசீரடியாசிரியவிருத்தம்]
|
பண்கனிந் தனைய சொல்லார் நரப்பிசைப் பாணி* தேவர்
உண்கனி யமுதுங் கைப்பச் செவிதொளைத் தூட்ட வுண்டும்
பெண்களி னமுத மன்னார் பெருமித நடன முண்ணக்
கண்களை விடுத்துங் காலங் கழிப்பவ ரளவி லாதார். |
(இ
- ள்.) பண் கனிந்தனைய சொல்லார் - பண் கனிந்தா லொத்த
(இனிய) சொல்லையுடைய மகளிர், நரப்பு இசைப் பாணி - யாழின்
இசையோடு கூடிய பாட்டினை, தேவர் உண் கனி அமுதும் கைப்ப - தேவர்
உண்ணுகின்ற (சுவை) முதிர்ந்த அமுதத்தையும் வெறுக்கும் படி, செவி
தொளைத்து ஊட்ட உண்டும் - செவியைத் தொளைத்து உண்பிக்க (அதனை)
உண்டும், பெண்களின் அமுதம் அன்னார் - பெண்களுள் அமுதம் போன்ற
மகளிர் (செய்யும்), பெருமித நடனம் உண்ண - மிக வுயர்ந்த நடனத்தை
நுகரும் பொருட்டு, கண்களை விடுத்தும் - பார் வைகளைச் செலுத்தியும்,
காலம் கழிப்பவர் அளவு இலாதார் - காலம் போக்குவோர் அளவற்றவர்கள்
(அப்பதியில் உளர்) எ - று.
பண்
கனிந்தனைய - பண் முற்றுப்பெற்றா லொத்த; கனிந்தா லனைய
எனற்பாலது விகாரமாயிற்று. நரம்பு - யாழைக் குறிக்கின்றது; மெல்லொற்று
வல்லொற்றாயது. இசையாகிய பாணி என்னலுமாம். கனி அமுது - சுவை
முற்றிய அமுது. தொளைத்தலை 'கேள்வியாற் றோட்கப்படாத செவி
என்பதனாலு மறிக; உபசாரம். 'செவியுணவு' என்பவாகலின் 'உண்டும்'
என்றார்; கண்ணுக்குங் கொள்க. (104)
கலவிவித்
தாக வூடிக் கட்புனல் குளிக்கு நல்லார்
புலவிதீர் செவ்வி நோக்கிப் புணர்முலைப் போகந் துய்த்தும்
நிலைநிலை யாமை நோக்கி நெறிப்படு+தரும தானங்
கலைஞர்கைப் பெய்துங் காலங் கழிப்பவ+ரெண்ணி லாதார். |
(பா
- ம்.) * இசை பாணி. +நெறிபடு. +கடப்பவர்.
|