I


புராண வரலாறு145



காரணங்களோடு உரைத்தனை - அவைகளின் ஏதுக்களோடு கூறினாய்,
கருத்தினுக்கு இசைய - எங்கள் கருத்துக்குப் பொருந்தும்படி எ -று.

     பர்ப்பதம் - திருப்பருப்பதம். அடைவது : பன்மை யொருமை
மயக்கம். இசைய உரைத்தனை என முடிக்க. (9)

ஐய மாதிமுக் குற்றமு மகலாநீ யருளிச்
செய்ய வுந்தெளிந் திலேங்கள்* யாஞ் சிற்றறி வுடையேம்
மைய னெஞ்சினே மாகையான் மயக்கற வின்னம்
உயு மாறருள் செய்தியென் றுரைத்தனர் மன்னோ.

     (இ - ள்.) ஐயம் ஆதி முக்குற்றமும் அகல - ஐயம் முதலிய
மூன்று குற்றங்களும் நீங்கும்படியாக, நீ அருளிச்செய்யவும் - நீ
உரைத்தருளவும், யாம் - நாங்கள், சிறு அறிவு உடையேம் - குறுகிய
அறிவினையுடையேமும், மைல் நெஞ்சினேம் - மயக்கத்தையுடைய
உள்ளமுடையேமும், ஆகையால் - ஆகையினாலே, தெளிந்திலேங்கள் -
தெளிவு பிறவாதிருக்கின்றோம், மயக்கு அற - அம்மயக்கம் நீங்க,
உய்யுமாறு - பிழைக்கும்படி, இன்னம் அருள் செய்தி என்று உரைத்தனர்
- இன்னும் கூறியருள வேண்டுமென்று விண்ணப்பித்தனர் எ - று.

     முக்குற்றம் : ஐயம், திரிபு. அறியாமை என்பன. மயக்கு -
மயக்கம் : ஈறு தொக்கது. செய்தி - செய்வாய்; த், எழுத்துப்பேறு. மன்,
ஓ : அசை. (10)

தலங்க டம்மின்மிக் குள்ளதாய்த்+ தகுதிசால் தீர்த்தக்
குலங்க டம்மின்மிக் குள்ளதாய்க்+ குறையிரந் தோர்க்கு
நலங்க டந்தருள் மூர்த்தியாய்$ நாதவே தாந்தப்
புலங்க டந்தபே ரொளியுறை தலனொன்று புகலாய்.

     (இ - ள்.) தலங்கள் தம்மில் - பலதலங்களிலும், மிக்குள்ளதாய் -
மேம்பட்டுள்ளதாகியும், தகுதி சால் - பெருமை மிகுந்த, தீர்த்தக் குலங்கள்
தம்மில் மிக்கு உள்ளதாய் - பல தீர்த்தங்களிலும் சிறந்த தீர்த்தத்தை
யுடையதாகியும் உள்ள, குறை இரந்தோர்க்கு - தங்கள் குறைகளைக் கூறி
வேண்டினாருக்கு, நலங்கள் தந்தருள் மூர்த்தியாய் - எல்லா
நன்மைகளையும் அருளுகின்ற மூர்த்தியாகி, நாத வேதாந்தம் புலம் கடந்த
- நாத தத்துவத்தி னிறுதியாகிய இடத்தையும் வேதத்தினிறுதியாகிய
இடத்தையும் கடந்தருளிய, பேர் ஒளி உறை - பெரி ஒளிப் பிழம்பாகிய
இறைவன் எழுந்தருளப் பெற்ற, தலம் ஒன்று புகலாய் - ஒரு தலத்தைக்
கூறவாயாக எ - று.

     அந்தம் என்பதை நாதத்துடனுங் கூட்டுக.

"வேத வந்தமுந் துளக்கற மெய்ப்பொருள் விளங்கு நாத வந்தமுங் கடந்ததோர் நடுநிலைப் பொருளின்"

என முன்னருங் கூறினார். அந்தம் ஆறு என்ப; இதனை,


     (பா - ம்.) *தெளிந்திலங்கள். +உள்ளதா. +உடையதாய். $மூர்த்தியா.