"வேதத்தி னந்தமும் மிக்கசித் தாந்தமும்
நாதத்தி னந்தமும் நற்போத வந்தமும்
ஓதத் தகுமெட்டி யோகாந்த வந்தமும்
ஆதிக்க லாந்தமு மாறந்த மாமே" |
என்னும் திருமந்திரத்தா
னறிக. (11)
என்ற போதெதிர் முகமலர்ந் திருள்மல வலியை
வென்ற சூதனுந் தலங்களின் விசேடமாய்ந் தம்பொற்
குற் வார்சிலை யானிடங் கொண்டுறை பதியுள்
ஒன்று கேட்கவீ டளிப்பதா யுளதுமற் றதுதான்.* |
(இ
- ள்.) என்றபோது - என்று கேட்டபோது, எதிர் முக மலர்ந்து
- எதிரே முகமலர்ச்சி கொண்டு, இருள் மல வலியை வென்ற சூதனும் -
ஆணவ மலத்தின் வலியை வென்ற சூதமுனிவனும், தலங்களின் விசேடம்
ஆய்ந்து - எல்லாப் பதிகளின் பெருமையையும், தலங்களின் விசேடம்
ஆய்ந்து - எல்லாப் பதிகளின் பெருமையையும் ஆராய்ந்து, அம்பொன்
குன்றம் - அழகிய பொன்மலையாகிய, வார் சிலையன் - நீண்ட
வில்லையுடைய இறைவன், இடம் கொண்டு உறை பதியுள் - இடமாகக்
கொண்டு எழுந்தருளி யிருக்கின்ற திருப்பதிகளுள், ஒன்று (உளது) - ஒன்று
உள்ளது. அது கேட்க வீடு அளிப்பது ஆய் உளது - அப்பதி தன்னைக்
கேட்டவளவில் வீட்டை யளிக்க வல்லது எ - று.
தலங்களிற்
சிறந்ததனை ஆராய்ந்து என வுரைத்தலுமாம். உளது
என்பத ஒன்று என்பதனோடுங் கூட்டி முடிக்கப்பட்டது. மற்று : வினை
மாற்று. தான் : அசை. (12)
முற்ற வோதிய
புராணமூ வாறனுட்+ காந்தம்
பெற்ற தாறுசங் கிதையவை யாறுந்தம் பெயராற்
சொற்ற பேர்சனற் குமரமா முனிவரன் சூதன்
கற்றை வார்சடைச் சங்கரன் மாலயன் கதிரோன். |
(இ
- ள்.) முற்ற ஓதிய - (யாவையும்) முடிவுபெறக் கூறிய, புராணம்
மூவாறனுள் - பதினெண் புராணங்களுள், காந்தம் - கந்த புராணமானது,
ஆறு சங்கிதை பெற்றது - ஆறு சங்கிதைகளைக் கொண்டது; அவை
ஆறும் - அச்சங்கிதைகள் ஆறனையும், தம் பெயரால் சொற்ற பேர் -
தங்கள் பெயராற் கூறியவர்கள், மா சனற் குமர முனிவரன் - பெருமை
பொருந்தி சனற்குமார மனிவனும், சூதன் - சூதமுனிவனும், கற்றைவார்
சடைச் சங்கரன் - திரண்ட நீண்ட சடையினையுடைய சங்கரனும், மால்
அயன் கதிரோன் - திருமாலும் அயனும் சூரியனுமாவர் எ - று.
பதினெண்
புராணங்களுள் மச்சம், கூர்மம், வராகம், வாமனம்,
சைவம், இலிங்கம், பௌடிகம், காந்தம், மார்க்கண்டேயம், பிராமாண்டம்
என்னும் பத்தும் சிவபுராணங்கள்; வைணவம், பாகவதம், காருடம், நாரதீயம்
என்னும் நான்கும் விண்டு புராணங்கள்; பிரமம், பதுமம் என்னும் இரண்டும்
பிரம புராணங்கள்; ஆக்கினேயம் அக்கினி
(பா
- ம்.) * மற்றதனை. +ஆறினுள்.
|