|
கீண்டு,
கீழ்ந்து என்பதன் மரூஉ. அண்ட கடாகம் - அண்ட
கோளத்தின் புறவோடு. (9)
அவ்வழிப்
புறம்பு சூழ்ந்து கிடந்பே ராழி யூழிப்
பௌவநீ ரென்ன வோங்கப் பாணியா லமைத்து வேணித்
தெய்வநன் னீரைத் தூவிக் கலந்துமா தீர்த்த மாக்கிக்
கைவரை கபாலி நந்தி கணத்தினை நோக்கிக் கூறும். |
(இ
- ள்.) அவ்வழி - அக்கீண்ட வழியால், புறம்பு சூழ்ந்து கிடந்த
பேர் ஆழி - அக் கடாகத்தின் புறத்தில் சுற்றிக்கிடந்த பெரும்புறக்
கடலானது, ஊழிப் பௌவம் நீர் என்ன - ஊழிக்காலத்திற் பொங்கி எழுங்
கடல்நீர் போல, ஓங்க - மேலோங்க, பாணியால் அமைத்து - (தனது)
திருக்கரத்தல் அமைக வென அமைத்து, வேணி - சடையிலுள்ள, தெய்வ
நல் நீரைத் தூவிக் கலந்து - தெய்வத் தன்மை பொருந்திய நல்ல நீரைத்
தெளித்துக் கலந்து, மா தீர்த்தம் ஆக்கி - பெருமை பொருந்திய
தீர்த்தமாகச் செய்து, கை வரை கபாலி - கையில் ஏந்திய கபாலத்தையுடைய
இறைவன், நந்தி கணத்தினை நோக்கிக் கூறும் - நந்திதேவரையும் மற்றைக்
கணத்தலைவர்களையும் பார்த்துக் கூறுவான் எ - று.
வரைதல்
- கொள்ளுதல். நந்தி முதலிய கணமும் ஆம். (10)
இன்னமா
தீர்த்தந் தன்னை யெனைப்பல தீர்த்தங் கட்கு
முன்னம்யா மிங்குக் கண்ட முதன்மையயா லாதி தீர்த்தம்
என்னலா மினியுண் டாக்குந் தீர்த்தங்க ளெவைக்கு மேலாய்
மன்னலாற் பரம தீர்த்த மெனப்பெயர் வழங்க லாகும். |
(இ
- ள்.) இன்னமா தீர்த்தம் தன்னை - இந்தப் பெருமைபொருந்திய
தீர்த்தத்தை, எனைப் பல தீர்த்தங்கட்கும் - பலவகையான தீர்த்தங்க
ளெல்லாவற்றையும் தோற்றுவித்தற்கு, முன்னம் - முன்பே, யாம் இங்கு
கண்ட முதன்மையால் - நாம் இவ்விடத்து உண்டாக்கிய முதன்மையினால்,
ஆதி தீர்த்தம் என்னலாம் - ஆதி தீர்த்தம் என்று, கூறலாம்; இனி
உண்டாக்கும் - மேல் தோற்றுவிக்கும், தீர்த்தங்கள் எவைக்கும் மேலாய்
மன்னலால் - தீர்த்தங்கள் அனைத்திற்கும் உயர்வாக நிலைபெறுதலால்,
பரம தீர்த்தம் என - பரம தீர்த்தம் என்று பெயர் வழங்கலாகும் - பெயர்
கூறலாகும் எ - று.
எனைப்
பல - எத்துணையும் பலவாகிய; எனை - எல்லாமென்னும்
பொருட்டு; 'எனைவகையாற் றேறியக்கண்ணும்' என்பது காண்க. தீர்த்தங்
கட்கும் - தீர்த்தங்களைத் தோற்றுவித்தற்கும் : ஐய்தாவதன் எல்லைப்
பொருளில் வந்தது. முன்னம், அம் : அசை; பகுதிப் பொருள் விகுதியுமாம்.
கண்ட : காரணப் பொருட்டு. ஆய், ஆக. (11)
மருட்கெட
மூழ்கி னோர்நன் மங்கலம் பெறலா னாமம்
அருட்சிவ தீர்த்த மாகும் புன்னெறி யகற்றி யுள்ளத்
திருட்கெட ஞானந் தன்னை யீதலான் ஞான தீர்த்தந்*
தெருட்கதி தரலான் முத்தி தீர்த்தமென் றிதற்கு நாமம். |
(பா
- ம்.) * இருட்கெடப் பரமமுத்திக் கேதுவா ஞானந் தன்னைத்
தெருட்படத் தரலான் ஞான தீர்த்தம்.
|