|
பெறாமையால், அழுங்கி
- வருந்தி, அரா உண்ண - பாம்பு விழுங்க,
மாசுண்டு பொலிவு மாழ்கும் திங்கள் அனையான் - குற்றப்பட்டுப்
பொலிவினை யிழக்கும் சந்திரனை ஒத்த இந்திரன், கடம்பவனத்து எல்லை
அணித்தாக - கடம்பவனத்து எல்லையின் அருகாக, செல்லும் ஏல்வை -
செல்லும் பொழுது எ - று.
விடாது
- விடாமையால், அணித்து - அணிமை; து : பகுதிப் பொருள்
விழுதி; எல்லையானது அணித்தாக என்னலுமாம். அங்கு அனகம் எனப்
பிரித்து, அங்கு யென்னலுமாம்; அனகம் - களங்கமின்மை. (70)
தொடுத்தபழி வேறாகி விடுத்தகன்ற
திந்திரன்றான் சுமந்த பாரம்
விடுத்தவனொத் தளவிறந்த மகிழவெய்தித்
தேசிகன்பால் விளம்பப் பாசங்
கெடுத்தவன்மா தலம்புனித தீர்த்தமுள
விவணமக்குக் கிடைத்தல் வேண்டும்
அடுத்தறிக வெனச்சிலரை விடுத்தவ்வே
றாநிலைநின் றப்பாற் செல்வான். |
(இ
- ள்.) தொடுத்த பழி வேறு ஆகி - பற்றிய பழியானது வேறு
பட்டு, விடுத்து அகன்றது - விட்டு நீங்கியது; இந்திரன் தான் சுமந்த பாரம்
விடுத்தவன் ஒத்து - இந்திரனானவன் தாங்கிய சுமையை இறக்கினவன்
போன்று, அளவு இறந்த மகிழ்வு எய்தி - அளவில்லாத களிப்புற்று,
தேசிகன்பால் விளம்ப - குரவனிடங் கூற, பாசம் கெடுத்தவன் -
பாசபந்தத்தை அறுத்தவனாகிய அத் தேசிகன், இவண் மாதலம் புனித
தீர்த்தம் உள - இங்குச் சிறந்த தலமும் தூய தீர்த்தமும் உள்ளன; நமக்குக்
கிடைத்தல் வேண்டும் - அவை நமக்குக் கிட்டுதல் வேண்டும்; அடுத்து
அறிக என - சென்று அவற்றைத் தெளிவாயாக என்று கூற, சிலரை விடுத்து
- அவற்றைத் தேடச் சிலரை ஏவி, அவ்வேறு ஆம் நிலை நின்று - அந்தப்
பழி நீங்கிய இடத்தினின்றும், அப் பால் செல்வான் - அப்புறம் செல்லுகின்ற
இந்திரன் எ - று.
அகன்ற
தென்பதை எச்சமாக்கலுமாம். தான் : அசை. மகிழவினை
யெய்தியென விரிக்க. தலமும் தீர்த்தமுமென எண்ணும்மை விரிக்க.
அவ்வேறா நிலை யென்பதற்குப் பிறர் கூறும் வேறு பொருள்கள் பொருந்தா
வென்க. செல்வான் : வினைப்பெயர்; பின் இன்ன என்னுஞ் செய்யுளிற்
செயனோக்கி என்பதனோடியையும்; எச்சமாக்கியும் முற்றாக்கியும்
உரைத்தலுமாம். (71)
அருவிபடிந் தருவியெறி மணியெடுத்துப்
பாறையிலிட் டருவி நீர்தூய்க்
கருவிரல்கொய் தவர்சூட்டிக் கனியூட்டி
வழிபடுவ கல்லா மந்தி |
|