|
கனம்
- கனகம். வரைதல் - கொள்ளலும், நீக்கலுமாம். பொய் வரை
- பொய்ம்மைநீங்கிய எனினுமாம். மரபுளி, உளி : மூன்றன் பொருள்படுவதொ
ரிடைச்சொல், முனிவராகிய ஆதி சைவருமாம். (44)
உத்தம குலத்து
நாற்பெருங் குடியு
முயர்ந்தவு மிழிந்தவு மயங்க
வைத்தவு மான புறக்குடி மூன்று
மறைவழுக் காமனு வகுத்த
தத்தம நெறிநின் றொழுகவை திகமுஞ்
சைவமுந் தருமமுந் தழைப்பப்
பைத்தெழு திரைநீர் ஞாலமேற் றிலகம்
பதித்தென நகர்வளம் படுத்தான். |
(இ
- ள்.) உத்த குலத்து நால்பெருங் குடியும் - உத்தம குலமாகிய
அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் என்னும் நான்கு பெருங் குடிகளும்,
உயர்ந்தவும் இழிந்தவும் மயங்க வைத்தவும் ஆன புறக்குடி மூன்றும் -
உயர்ந்தவனவும் இழிந்தனவும் கரந்தனவுமான மூன்று புறக் குடிகளும், மறை
வழுக்கா மனு வகுத்த - வேத விதி வழுவாது மனு வால் வகுக்கப்பெற்ற,
தத்தம் நெறி நின்று ஒழுக - தங்கள் தங்களுக்குரிய ஒழுக்கத்தில்
வழுவாதொழுகவும், வைதிகமும் சைவமும் தருமமும் தழைப்ப - வேதநெறியும்
சைவநெறியும் அறமும் செழித்தோங்கவும், பைத்து எழுதிரை நீர் ஞாலமேல்
- பசுமையுடையதாய்த் தோன்றும் அலைகளையுடைய கடல் சூழ்ந்த
நிலவுலகத்தில், திலகம் பதித்தென - (பாண்டி நாட்டிற்கு) ஓர் திலகம்
பதித்தாற்போல, நகர் வளம் படுத்தான் - நகரை வளப்படுத்தினான் எ - று.
குலத்து,
அத்து : வேண்டாவழிச் சாரியை. புறக்குடியுள் உயர்ந்தன -
நான்கு வருணத்தில் உயர்குல ஆணும் இழிகுலப் பெண்ணும் கூடிப் பிறந்த
அநுலோமரின் வனையெனவும், இழிந்தன - உயர்குலப் பெண்ணும் இழிகுல
ஆணும் கூடிப் பிறந்த பிரதிலோமரின் வகையெனவும் மயங்கவைத்தன -
அநுலோம பிரதிலோம ஆண் பெண் கூடிப் பிறந்த அந்தராளரும்
விராத்தியரு மென்போரின் வகையெனவும் கொள்க; இவற்றை விரிவாக
அறிய வேண்டுவோர் மிருதிகள் முதலயவற்றுட் காண்க; இவையெல்லாம்
ஆராயற்பாலன தத்தம, அ : ஆறனுருபு; தத்தமக்குரிய வென்க. (45)
அன்றுதொட்
டரச னந்நக ரெய்தி
யணிகெழு மங்கல மியம்ப
என்றுதொட் டிமைக்கு மனையின்மங் கலநா
ளெய்தினா னிருந்துமுப் புரமுங்
குன்றுதொட் டெய்தான் கோயின்மூன் றுறுப்புங்
குறைவில்பூ சனைவழா தோங்கக்
கன்றுதொட் டெறிந்து கனியுகுத் தான்போற்
கலிதுரந் தரசுசெய் நாளில். |
|