I


318திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



     கல்யாணம் - பொன்னைக் குறிப்பது. வேற்தர் - பகைவராய்ச்
சிறைப்பட்டவர். கழல நத்து : ஒரு சொல்; கழலுமாறு விடுத்துமாம்.
தொன்முறையாற் பெறுமாறு. பொன்னும் ஆடையும் என்றும், மணி
யானியன்ற பூண் என்றும், பூண் முதலிய வெறுக்கை என்றும் கூறுதலுமாம்.
எனைப் பலவும் - எனைத்தும் பலவாகியவும். வீசி - வரைவின்றி வழங்கி.(29)

தூமரபின் வருபெருமங் கலகவிகட்
     கிருநிதியந் துகில்பூண் பாய்மா
காமர்கரி பரித்தடந்தேர்* முதலாய
     பலபொருளுங் களிப்ப நல்கிக்
கோமறுகு களிதூங்கச் சுண்ணமொடு
     மெண்ணெய்விழாக் குளிப்ப நல்கி
மாமதுரா நகரன்றி மற்றுமுள
     நகரெங்கு மகிழ்ச்சி தூங்க.

     (இ - ள்.) தூமரபில் வரு - தூய மரபில் வருகின்ற, பெரு மங்கல
கவிகட்கு - பெரிய மங்கலப் பாடர்களுக்கு, இருநிதியம் - பெரும் பொருளும்,
துகில் பூண் - ஆடைகளும் அணிகளும், பாய் மா - நாவுகின்ற குதிரைகளும்,
காமர் கரி - அழகிய யானைகளும், பரித் தடந்தேர் - குதிரைகள் பூட்டிய
பெரியதேர்களும், முதலிய பல பொருளும் - இவை முதலிய பல
பொருள்களையும், களிப்ப நல்கி - (அவர்கள்) மகிழக் கொடுத்து, கோ மறுகு
- மன்னர் வீதிகளில், களி தூங்க - மகிழ்ச்சி மிக, சுண்ணமொடும் எண்ணெய்
- மணப் பொடியையும் எண்ணெயையும், விழாக் குளிப்ப நல்கி - நெய்யணி
விழாக் கொண்டாடுதற்குக் கொடுத்து, மா மதுரா நகர் அன்றி - பெரிய
மதுரைப்பதியே அல்லாமல், மற்றும் உள நகர் எங்கும் மகிழ்ச்சி தூங்க -
ஏனைய பதிகளும் களிப்பு மீக்கூர எ - று.

     மங்கல கவி : வடநூன் முடிபு. நிதியம் - பொன். விழா - நெய்யணி
விழா; இதனை,

"புதல்வற் பயந்த புனிறுசேர் பொழுதில்
நெய்யணி மயக்கம் புரிந்தோள்"

என ஆசிரியர் தொல்காப்பியர் கூறுமாற்றானும் அறிக. (30)

இவ்வண்ண நகர்களிப்ப விறைமகனுங்
     களிப்பெய்தி யிறைவர் சொன்ன
அவ்வண்ணஞ் சாதமுதல் வினைநிரப்பித்
     தடாதகையென் றழைத்துத் தேவி
மெய்வண்ண மறையுணரைா விறைவிதனை
     மேனைபோன் மேனா ணோற்ற
கைவண்ணத் தளிர்தீண்டி வளர்ப்பவிம
     வான்போலக் களிக்கு நாளில்.

     (பா - ம்.) * பரிநெடுந்தேர்.