I


350திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



உணர்ந்த அரசர்களும், அமைச்சரும் பிறரும் போந்தார் - மந்திரிகளும்
மற்றையோர்களும் வந்தார்கள்; வலவனும் - தேர்ப்பாகனும் வாம்பரி கடாவித்
திண் தேர் கொணர்ந்தான் - தாவிச் செல்லுங் குதிரைகளைச் செலுத்தித்
திண்ணிய தேரைக்கொண்டு வந்தான்; வையம் பரிவு அகல வந்தாள் -
உலகமானது துன்பத்தினின்றும் நீங்க அவதரித்த பிராட்டியார், சங்கம்
ஆர்ப்ப ஏறினான் - சங்குகள் ஒலிக்க (அத்தேரில்) ஏறினார் எ - று.

     கோதை - கூந்தலுமாம். தேம்பரி - தேனொழுகுகின்ற என்னலுமாம்.
நோக்கி : நோக்கனோக்கம். ஆம் பரிசு என்பதற்குப் போர்க்குரிய தன்மை
யென்றும், ஆட்சிக்குப் பொருந்திய தன்மை யென்றும் மேல் விளையு
என்றும் பொருள் கோடலுமாம். வேந்தரும் என உம்மை விரிக்க. பிறர்
என்றது படைத்தலைவர் முதலாயினாரை. ஆகும், வாவும் என்பன
விகாரமாயின. தாம் :அசை. வந்தான் : பெயர். (6)

ஆர்த்தன தடாரி பேரி யார்த்தன முருடு மொந்தை
ஆர்த்தன வுடுக்கை தக்கை யார்த்தன படகம் பம்பை
ஆர்த்தன முழுவந் தட்டை யார்த்தன சின்னந் தாரை
ஆர்த்தன காளந்தாள மார்த்தன திசைக ளெங்கும.்

     (இ - ள்.) தடாரி பேரி ஆர்த்தன - தடாரிகளும் பேரிகளும்
ஒலித்தன; முருடு மொந்தை ஆர்த்தன - முருடுகளும் மொந்தைகளும்
ஒலித்தன; உடுக்கை தக்கை ஆர்த்தன - உடுக்கைகளும் தக்கைகளும்
ஒரித்தன; படகம் பம்பை ஆர்த்தன - படகங்களும் பம்பைகளும் ஒலித்தன;
முழவம் தட்டை ஆர்த்தன முழவங்களுந் தட்டைகளும் ஒலித்தன; சின்னம்
தாரை ஆர்த்தன - சின்னங்களும் தாரைகளும் ஒலித்தன; காளம் தாளம்
ஆர்த்தன - காளங்களும் தாளங்களும் ஒலித்தன; திசைகள் எங்கும்
ஆர்த்தன - (இவைகளால்) எட்டுத் திக்குகளும் ஒலித்தன எ - று.

     தடாரி முதலிய வாத்திய விசேடங்கள். எட்டுத்திசைகளிலும் இவ்
வொலிகள் நிறைந்தன வென்பார் ‘ஆர்த்தன திசைகளெங்கும்’ என்றார்;
எதிரொலி செய்தன வென்னலுமாம். (7)

வீங்கிய கொங்கை யார்த்த கச்சினர் விழிபோற் றைப்ப
வாங்கிய சிலையே றிட்ட கணையினர் வட்டத் தோல்வாள்
தாங்கிய கையர் வைவேற் றளிர்க்கையர் பிணாத்தெய் வம்போல்
ஓங்கிய வாயத் தாரு மேறினா ருடனத் திண்டேர்.

     (இ - ள்.) வீங்கிய கொங்கை ஆர்த்த கச்சினர் - பருத்த கொங்கை
களிற் கட்டிய கச்சினையுடையராய், விழிபோல் தைப்ப - (தங்கள்) கண்கள்
போலத்தைக்குமாறு, வாங்கிய சிலை ஏறிட்டகணையினர் - வளைந்த
வில்லிற்பூட்டிய அம்பினையுடையராயும், வட்டத்தோல் வாள்தாங்கிய கையர்
- கேடகத்தையும் வாளையும் ஏந்திய கையையுடையராயும், வைவேல்
தளிர்க்கையர் - கூரிய வேலையுடைய தளிர்போன்ற கையையுடையராயும்,
பிணாத்தெற்வம்போல் ஓங்கிய - பெண் தெய்வம் போலச் சிறந்த,
ஆயத்தாரும் - மகளிர் கூட்டங்களும், உடன் அத்திண் தேர் ஏறினார் -
பிராட்டியாரோடும் அந்தத் திண்ணிய தேரில் ஏறினார்கள் எ - று.