|
காலினும்,
பல்லினும் என்பவற்றில் இன் உருபு உறழ்ச்சிப் பொருளில்
வந்தது. மேலினும், இன் ; சாரியை. வென்கண்டு என்ற மையால் போர்
புரிந்து என விரித்துக் கொள்க. பால் - தன்மை. வென்றியால் வீக்கிய
எனலுமாம். ஆயினர் என விரித்துரைத்துக் கொள்க. (12)
எண்பதைத்
தெழுந்த வீர ரிவுளிதேர் யானை வெள்ள
மண்புதைத் தனப தாகை மாலைவெண் கவிகை பீலி
விண்புதைத தனநுண் டூளி வெயில்விடு பரிதிப் புத்தேள்
கண்புதைத் தனபே ரோதை கடலொலி புதைத்த தன்றே. |
(இ
- ள்.) எண் புதைத்து எழுந்த - இங்ஙனம் எண்ணின் அளவைக்
கடந்து எழுந்த, வீரர் இவுளி தேர்யானை வெள்ளம் - வீரர் குதிரை தேர்
யானை என்பவற்றின் கூட்டங்கள்; மண் புதைத்தன - நிலவுலகை மறைத்தன;
பதாகை மாலை வெண் கவிகை பீலி - கொடிகளும் மாலையையுடைய
வெளிளய குடைகளும் மயிற் பீலிகளும், விண் புதைத்தன - வானினை
மறைத்தன; நுண் தூளி வெயில் விடு பரிதிப்புத்தேள் கண் புதைத்தன -
நுண்ணிய புழுதிகள் வெயிலை வீசும் சூரிய தேவனின் கண்களை மறைத்தன;
பேர் - ஓதை கடல் ஒலி புதைத்தது - (இவற்றாலாய) பெரிய ஒலியானது
கடலின் ஒலியை மறைத்தது எ - று.
எண்
புதைத்து எண்ணினை மறைத்து; இல்லையாக்கி; கடந்தென்ற படி.
வெள்ளம் என்பது வீரர் முதலியவற்றொடும் இயையும், பதாகை -
பெருங்கொடி, அன்று, ஏ : அசைகள்; அடுத்த செய்யுளுக்குங் கொள்க. (13)
தேரொலி கலினப் பாய்மான்*
செலவொலி கொலைவெண் கோட்டுக்
காரொலி வீர ரார்க்குங்
கனையொலி புனைதார்க் குஞ்சி
வாரொலி கழற்காற் செங்கண்
மள்ளர்வன் றிண்டோள் கொட்டும்
பேரொலி யண்ட மெல்லாம்
பிளந்திடப் பெருத்த வன்றே. |
(இ
- ள்.) தேர் ஒலி - தேர்களின் ஒலியும், கலினப் பாய்மான் செலவு
ஒலி - கடிவாளத்தையுடைய குதிரைகள் செல்லுகின்ற ஒலியும், கொலை வெள்
கோட்டு கார் ஒலி - கொல்லுதலையுடைய வெள்ளிய கொம்புகளையுடைய
முகில் போன்ற யானைகளின் ஒலியும், வீரர் ஆர்க்கும் கனை ஒலி -
மள்ளர்கள் ஒலிக்கின்ற மிக்க ஒலியும், தார்புனை குஞ்சி - மாலையை யணிந்த சிகையையும்.
வார் ஒலி கழல் கால் - மிக்க ஒலியையுடைய வீரகண்டையை
யணிந்த கால்களையும், செங்கண் - சிவந்த கண்களையுமுடைய, மள்ளர் -
வீரர்கள், வல் திண் தோள் கொட்டும் பேர் ஒலி -வலிமை மிக்க
தோள்களைத் தட்டுகின்ற பெரிய ஒலியும் ஆகிய இவைகள், அண்டம்
பிளந்திடப் பெருத்த - அண்டங்கள் வெடிக்குமாறு மிக்கன எ - று.
(பா
- ம்.) * பாய்மா.
|