|
மணவாளனோ ஒப்பற்றவன்,
மணவினைக் கன்னியும் அனையவள் என்னின்
- மணச்செயலுக்குரிய பெண்ணும் இத்தன்மையள் என்றால், இ கடி நகர்
செய்யும் எழில் வளனை - இக்காவலையுடைய பதியிற் செய்யப்பட்டிருக்கும்
அழகின் மேன்மைக்கு, என்ன அரிய நகர் செயல் எழில் - எப்படிப்பட்ட
அரிய நகரின் ஒப்பனை யழகினையும், யாம் இணை என உரை செய்வது
எவன் - யாம் ஒப்பு என்று கூறுவது எவ்வாறு; இதன் முன் - இனி, இறை
மகள் தமர் - பிராட்டியாரின் சுற்றத்தார், மண அணி மண்டபம் - அழகிய
திருமண மண்டபத்தை வினைசெயும் முறை சொல்வாம் - அலங்காரம்
செய்யும் தன்மையைக் கூறுவாம் எ - று.
இக்கடிநகர்
செயும் எழில் வளனை, சுட்டு. வளனை : வேற்றுமை
மயக்கம். அணிசெய் அதனை உரை செய்வது எவன் என வியையும். நகர்
என்பதற்கு நகரத்திலுள்ளார் என்று கூறலுமாம். என்னின் என்பது
உரைசெய்வது கூடாதென்பதற்கு ஏதுவாய் நின்றது. என்ன -
எத்தன்மையுடைய, செயலெழிலையும் என உம்மை விரிக்க. செயலெழில் -
ஒப்பித்த அழகு. முன் என்பது வருவதனையுங் குறிக்கும். இதற்கு முன்னரே
தொடங்கி யென உரைத்தலுமாம். (61)
|
[-
வேறு]
|
கருவி வான்முகி
லூர்தியைப்
பொருதநாட் கலைமதி மருமாட்டி
செருவில் வாங்கிய விமானமா
லைகளெனத் தெய்வத வரையெல்லாம்
மருவி யந்நகர் வைகிய
தம்மிறை மடமக டனைக்காண்பான்
துருவி நின்றென நட்டன
ரெட்டிவான் றொடுநிலை நெடுந்தேர்கள். |
(இ
- ள்.) கலைமதி மருமாட்டி - கலைகளையுடைய சந்திரனது
மரபிற் றோன்றிய பிராட்டியார், கருவிவான் முகில் ஊர்தியை - தொகுதியாக
வானின்கண் உள்ள முகிலை ஊர்தியாகவுடைய இந்திரனை, செருவில்
பொருத நாள் - போரில் வென்ற காலத்து, வாங்கிய விமான மாலைகள் என
- (திறையாக) வாங்கிய விமான வரிசைகள் நின்றாற் போலவும், தேய்வதவரை
எல்லாம் மருவி - தெய்வத்தன்மை பொருந்திய மலைகளெல்லாம் வந்து, அ
நகர் வைகிய - அத் திருப்பதியில் எழுந்தருளிய, தம் இறை மடமகள்தனைக்
காண்பான் - தம் இறைவனாகிய மலையரையனின் புதல்வியாரைக் காண,
துருவி நின்றென - தேடி (வரிசைப்பட) நின்றாற் போலவும், எட்டி
வான்தொடு நெடு நிலைத்தேர்கள் நட்டனர் - எட்டி வானுலகை அளாவும்
நெடிய நிலைத் தேர்களை வரிசையாக நிறுத்தினர் எ - று.
பொருத
- பொருதுவென்ற. மருமாட்டி - வழித்தோன்றியவள்,
மருமானுக்குப் பெண்பால். காண்பான் : வினையெச்சம். நின்றென -
நின்றாலென : விகாரம். எட்டி - தாவி : தற்குறிப்பேற்றவணி.
(62)
|