I


380திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



உரு - செதுக்கியமைத்த வடிவுகள். போதி - தூணின்மேலுள்ள உறுப்பு;
போதிகை யெனவும் படும். துலாம் - போதிகையின் இரு பக்கத்தின் கீழே
வாழைப் பூ வடிவமாகச் செய்யப்படும் உறுப்பென்பர்; ‘துகில்துலா மண்டபத்
தகிற்புகை கமழ’ என்னும் பெருங்கதையடியின் குறிப்புரை பார்க்க; இது
‘துலா’ எனவும் வழங்கும்; சிலப்பதிகார அடைக்கலக் காதையில் ‘ஐயவித்
துலாம்’ என்பதற்கு எழுதிய விசேடவுரையும் நோக்கற் பாலது. உருக்கிய -
கெடுத்த என்னும் பொருளது. வில் - ஒளி, கிரணம். இரு செய்யுளிலுமுள்ள
குறிப்பு முற்றுக்கள் ‘ஆகிய’ என்பதனோ டியைந்து எச்சமாம். (64)

முத்திற் பாளைசெய் தவிர்மர
     கதத்தினான் மொய்த்தபா சிலைதுப்பின்
கொத்திற் றீம்பழம் வெண்பொனாற்
     கோழரை குயின்றபூ கமுந்துப்பின்
றொத்திற் றூங்குபூச் செம்பொனாற்
     பழுக்குலை தூக்கிப்பொன் னாற்றண்டு
வைத்துப் பாசொளி மரகத
     நெட்டிலை வாழையு நிரைவித்தார்.

     (இ - ள்.) முத்தில் பாளை - முத்தினாற் பாளையும், அவிர்
மரகதத்தினால் மொய்த்த பசு இலை - விளங்காநின்ற மரகதத்தினால்
நெருங்கிய பசிய இலையும், துப்பின் கொத்தில் தீம்பழம் - பவளக்
கொத்தினால் இனிய பழங்களும், வெண்பொனால் கோழ் அரை -
வெள்ளியினால் வழுவழுப்பான அரையும், செய்து குயின்ற பூகமும் -
செய்தமைத்த கமுகுகளையும், துப்பின் தொத்தில் தூங்கும்பூ - பவளக்
கொத்தினால் தொங்கும் பூவோடு. செம்பொனாற் பழுக்குலை தூக்கி - சிவந்த
பொன்னாற் பழுத்தலுடைய குலையையும் தொங்கவிட்டு, பொன்னால் தண்டு
வைத்து - பொன்னால் தண்டு செய்து, பசு ஒளி மரகத நெடு இலை - பசிய
ஒளியையுடைய மரகதத்தினால் நெடிய இலையை (அமைத்த), வாழையும்
நிரைவித்தார் - கதலிகளையும் (அத் திருமண மண்டபத்தில்) வரிசைப்படக்
கட்டினார்கள் எ - று.

     பானை முதலியவற்றின் நிறங்களுக் கேற்ப முத்து முதலியவற்றால்
இயற்றினார். பாசிலை. கோழரை, பாசொளி என்பன பசுமை கொழுமை
யென்பவற்றின் மை விகுதிகெட்டு ஆதிநீண்டு முடிந்தன. நெட்டிலை : நெடு
என்பதன் ஒற்றிரட்டிற்று. இலை அமைத்த என வொரு சொல் வருவிக்க. (65)

பித்த மாதவி சண்பகம்
     பாதிரி பிறவுமண் டபஞ்சூழப்
பத்தி யாவளர்த் தளிகள்வாய்
     திறந்துபண் பாடவின் மதுக்காலத்
தத்தி யாய்மணங் கவர்ந்துசா
     ளரந்தொறுந் தவழ்ந்தொழு கிளந்தென்றல்
தித்தி யாநிற்கு மதுத்துளி
     தெளித்திடச் செய்தன ருய்யானம்.