செம்பொற் கோயின்முன் சேண்டொடு
காவணந் திசையெலாம் விழுங்கச்செய்
தம்பொற் பாலிகைப் பாண்டில்வாய்
முளைதெளித் தம்புயத் தவனாதி
உம்பர்க் கேற்றபொற் கம்பல
மேல்விரித் துள்ளுறத் தவிசிட்டுத்
தும்பைத் தாழ்சடை யான்றமர்க்
காதனஞ் சூழவிட் டதனாப்பண். |
(இ
- ள்.) செம்பொன் கோயில் முன் - செம் பொன்னாலாகிய
திருமண மண்டபத்தின் முன், சேண் தொடு காவணம் திசை எலாம் விழுங்கச்
செய்து - வானை அளாவிய பந்தரைத் திக்குகளை யெல்லாம் கவருமாறு
போடுவித்து, அம் பொன் பாலிகைப் பாண்டில் வாய் - அழகிய
பொன்னாலாகிய பாலிகை வட்டில்களில், முளைதெளித்து - முளைகளை
வித்தி, அம்புயத்தவன் ஆதி - பிரமன் முதலிய, உம்பர்க்கு ஏற்ற -
தேவர்களுக்குத் தகுதியான, பொன் கம்பலம் மேல் விரித்து -
பொற்கம்பலத்தை மேலே விரித்து, உள் உறத் தவிசு இட்டு - அதனுள்ளே
பொருந்த ஆதனமிட்டு, தும்பை தாழ்சடையான் தமர்க்கு - தும்பைமாலையை
அணிந்த நீண்ட சடையையுடைய சிவபெருமான் தமராகிய அயிார்களுக்கு,
சூழ ஆதனம் இட்டு - சுற்றிலும் தவிசு அமைத்து, அதன் நாப்பண் - அதன்
நடுவில் எ - று.
விழுங்கல்
- அகப்படுத்தல். பாண்டில் - வட்டம்; வட்டமாகிய
கலத்திற்கு ஆயிற்று. ஏற்ற கம்பலம், ஏற்ற தவிசு எனக்கூட்டுக. மேல்விரித்தல்
- மேற்கட்டியாக, அமைத்தல். அதன் எனச் சாதி யொருமையாற் கூறினார்.(69)
கற்ப கந்தரு வயிரவா
ளரிப்பிடர் கதுவப்பொற் குறுடேற்றி
எற்ப டுந்துகி ராற்குடஞ்
சதுரமா வியற்றிய வெருத்தத்தூண்
விற்ப டும்பளிக் குத்தரந்
துப்பினால் விடங்கமே னிலமூன்றாப்
பொற்ப நூல்வழி விமானம்பன்
மணிகளாற் பொலியச்செய் துள்ளாக. |
(இ
- ள்.) கற்பகம் தரு வயிரவாள் அரிப்பிடர் கதுவ - கற்பகத் தரு
அளித்த வயிரத்தாற்செய்த ஒளி பொருந்திய சிங்கத்தின் பிடரியிற் பொருந்த,
பொன்குறடு ஏற்றி - பொற் குறடு எழுப்பி, எற்படும் துகிரால் -
ஒளிபொருந்திய பவளத்தாலாகிய, குடம் - குடத்தோடு, சதுரமா இயற்றிய
எருத்தத்தூண் - சதுரமாகச் செய்த கழுத்தையுடைய தூண்களை (நிறுத்தி),
வில்படும் பளிக்கு உத்தரம் - ஒளிபொருந்திய பளிங்கினால்
உத்திரங்களையும், துப்பினால் விடங்கம் - பவளத்தினாற் கொடுங்
|