|
எனவருஞ் செய்யுளாலறிக.
ஆடகேசுரர் பாதாளத்துக்கு மேலுள்ள புவனத்தில்
ஆயிரம் யோசனை உயரமுள்ள பொன்மயமான திருக்கோயிலுள் அசுரரும்,
நாகரும், அரக்கரும் சேவிக்க வீற்றிருப்பர். இதனைச் சிவதருமோத்தரம்
கோபுரவியலில்.
"அதன்மேலே
நவலக்க மாடகநா யகர்புரிதான்
புதுமைதிகழ் மனைபொன்னால் யோசனையா யிரம்புகலிற்
கதமுடைய தயித்தியர்கள் கட்டரவர் வெட்டரக்கர்
விதிமுறையிற் பதம்பணிய வீற்றிருப்பா ராடகரே" |
எனவருஞ் செய்யுளாலறிக.
முன்னொரு கற்பத்தில் பிரமனானவன் மூன்று
உலகங்களையுஞ் சிருட்டித்துத் தானே பரமென் றகங்காரங் கொண்டு
சிவபெருமானை மறந்து சராசங்களைச் சிருட்டிக்க; அவை பெருகாமையால்
வருந்தி நிற்கும்போது திருமால்வந்து எம் முதல் வனாகிய சிவபெருமானை
மறந்தமையால் அவை பெருக லொழிந்தன ஆதலின், இனியேனும் அவனது
திருவருளைப் பெறத் தவம்புரிக என்றனன்; அவ்வாறு தவம்புரிந்தும்
சிவபெருமான் வெளிப்படாமையால் வருந்தி அழும்போது கண்ணீர்த் துளிகள்
கசாசுகளாய் நெருங்க, அதனைக் கண்டு இறந்தவன்போல மூர்சிக்க,
அச்சிவபெருமான் கனவில் வந்தருளி உன்னைப் பரமென்று மதித்தமையால்
சிருட்டித் தொழில் உனக்குக் கைகூடாமற் போயிற்று; அது கைகூடும்
வண்ணம் நமது பதத்திலுள்ள உருத்திரகணத்தை அனுப்புவோம் என்றருளி
மறைந்தனன்; அக்கன வணர்ந்தெழுந்த பிரமன் நல்லொழுக்கம் பூண்டு
மனந்தெளிந்து சிவபெருமானை நிட்டை கூடிச் சிந்திக்க, அப்பெருமான்
றிருவருளால் பதினொரு உருத்திரர்கள் அவனெற்றியினின்றும் வெளிப்பட்டு
வந்து நின்றனர்; அவர்களைப் பிரமன் பார்த்து என் னெற்றியினின்று நீங்கள்
வந்த காரணம் யாதென்று வினவ உன் சிருட்டித் தொழிலை
முடித்தற்பொருட்டுச் சிவபெருமான் எங்களை யேவினன் என்றனர்; இதனைக்
கந்தபுராணத்து உருத்திரர் கேள்விப் படலத்தாலுணர்க.
நீலலோகித
நாதராவார் அப்பதினொருவருள் ஒருவர். அவர்களின் பெயர்களை வருஞ்
செய்யுளுரையிற்காண்க. (83)
பால மேற்றறசந்
தழல்விழி
யுருத்திரர் பதினொரு பெயர்வாகைச்
சூல மேற்றகங் காளக
பாலியர் துரகத நெடுங்காரி
நீல மேற்றபைஞ் கஞ்சுகப்
போர்வையி னெடியவர் நிருவாணக்
கோல மேற்றவ ரெண்மர்ஞா
ளிப்புறங் கொண்டகேத் திரபாலர். |
(இ
- ள்.) பாலம் ஏற்ற செந்தழல் விழி உருத்திரர் பிதனொரு பெயர்
- நெற்றியிற் பொருந்திய சிவந்த அழற் கண்ணையுடைய பதினொரு
உருத்திரர்களும், வாகைச் சூலம் ஏற்ற கங்காள கபாலியர் - வெற்றியை
யுடைய சூலத்தை யேந்திய முழுவெலும்பைத் தரித்தவரும்
|