I


குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்477



     (இ - ள்.) பாரித்துள இப்பண்டமும் - நிறைந்துள்ள இப்
பொருள்களையும், பரூஉ குறுங்கையால் - பரிய குறிய கையினால், வாரி தன்
பெரு வயிற்றிடை வைப்பவும் - அள்ளித் தனது பெரிய வயிற்றின்கண்
போடவும், துடுவை பூரித்து - துடுவையால் (நெய்யை) நிரப்பி, ஆகுதி
பண்ணிய தழல் என - ஆகுதி செய்த வேள்வித் தீயைப் போல, பசித்தழல்
பொங்கிக் கோரித்து - பசித் தீயானது கோரமாய்ப் பொங்கி, ஒன்பது
வாயிலும் கொளுத்த - நவத்துவாரங்களிலும் கொளுத்த எ - று.

     பாரித்து - பரந்து; இது தன் வினைக்கும் பிற வினைக்கும் பொதுவான
சொல். மரூஉ வென்பது போற் பரூஉ வென்றாயது. பூரித்தல் - நிரப்புதல்.
கோரித்து - கொடுமையுற்று; கோரம் என்னும் பெயரடியாகப்
பிறந்தவினை.(16)

அலங்க லோதிகண் டதிசய மடைந்துதன் னன்பின்
நலங்கொ ணாயகன் முன்புபோய் நாணமுட் கிடப்ப
இலங்கு பூங்குழல் சுவன்மிசை யிறக்கியிட் டொல்கி
நிலங்கி ளைத்துநின் றாணிலை கண்டனன் நிருபன்.

     (இ - ள்.) அலங்கல் ஓதி கண்டு அதிசயம் அடைந்து -
மாலையையணிந்த கூந்தலையுடைய பிராட்டியார் இதனைக் கண்டு வியப்புற்று,
தன் அன்பின் நலம்கொள் நாயகன் முன்பு போய் - தம் அன்பினது
நலத்தைக் கொள்ளும் நாயகனது திருமுன் சென்று, நாணம் உட் கிடப்ப -
நாணம் உள்ளத்திற் கிடப்ப, இலங்கு பூங்குழல் - விளங்குகின்ற பூவையணிந்த
கூந்தலை, சுவல்மிசை இறக்கியிட்டு - தோளிலே தாழ்த்தி, ஒல்கி நிலம்
கிளைத்து நின்றாள் - துவண்டு (திருவடிப் பெரு விரலால்) நிலத்தைக்
கிண்டிக் கொண்டு நின்றார்; நிலை நிருபன் கண்டனன் - அந்நிலைமையை
அரசனாகிய சுந்தர பாண்டியன் கண்டனன்

.      'போனகம் எல்லையின்றாக்கி உணங்குகின்றது' எனக் கூறியவர்
அவையனைத்தும் ஒருவன் பசியையாற்றுதற்கும் போதாமை கண்டமையின்
நாணமுடையராயினார். தலை சாய்த்தலும் நிலங்கிளைத்தலும் நாணத்தால்
நிகழ்வன. (17)

அஞ்சி லோதியை வினவுவா னறிகலான் போலக்
குஞ்சி யாரழ லன்னவக் குடவயிற் றவனுண்
டெஞ்சி யுள்ளவேற் பூதங்க ளின்னமும் விடுத்துன்
நெஞ்சு வப்பவே யருத்துது மென்னலு நிமலை.

     (இ - ள்.) அம்சில் ஓதியை - அழகிய சிலவாகிய கூந்தலையுடைய
பிராட்டியாரை, அறிகலான் போல வினவுவான் - தெரியாதவன் போல
வினவுகின்றவன், ஆர் அழல் அன்ன குஞ்சி - நிறைந்த நெருப்பைப் போலும்
சிகையினையுடைய, அக்குட வயிற்றவன் - அக்குண்டோதரன், உண்டு எஞ்சி
உள்ளவேல் - உண்டு உணவு எஞ்சியிருக்குமாயின், இன்னமும் பூதங்கள்
விடுத்து - இன்னும் பூத கணங்களை அனுப்பி, உன் நெஞ்சு உவப்ப
அருத்துதும் என்னலும் - உன் உள்ளம் மகிழுமாறு உண்பிப்போம் என்று
கூறலும், நிமலை - பிராட்டியார் எ - று.

     அஞ்சிலோதியென்பதற்கு யாம் கூறியதே பொருளாதலை, என்னும்