|
வேந்தனாகிய
சோமசேகரனென்று கருதி யென விரிக்க. திருமாது -
திருவாகிய மாது. கனைதல் - செறிதல். வடி வணங்கு என்று பெயர் கூறுவர்
பெரும்பற்றப் புலியூர் நம்பி. (3)
வெள்ளைக்
களிற்றின் பிடர்சுமந்த குடுமிக் கோயின் மேயவிளம்
பிள்ளைக் கதிர்வெண் மதிமௌலிப் பெருமா னிரவி மருமானாம்
வள்ளற் கரத்தான் கனவிலெழுந் தருளி வானோர் நனவிற்குங்
கள்ளத் துருவாந் திருமேனி காட்டி யிதனை விளம்புவார். |
(இ
- ள்.) வெள்ளைக் களிற்றின் பிடர் சுமந்த குடுமிக் கோயில் -
வெள்ளை யானையின் பிடர் சுமந்த சிகரத்தை யுடைய திருக்கோயிலில்,
மேய - வீற்றிருந்த, இளம்பிள்ளை - இளங் குழவி யாகிய, வெள் கதிர் மதி
- வெள்ளிய ஒளியை யுடைய சந்திரனை யணிந்த, மௌலிப் பெருமான் -
சடையை டைய சோமசுந்தரக் கடவுள், இரவி மருமான் ஆம் வள்ளல்
கரத்தான் - சூரியன் வழித் தோன்றலாகிய வள்ளன்மையை யுடைய
கையையுடைய சோமசேகரனது, கனவில் எழுந்தருளி - கனவின்கண்
எழுந்தருளி, வானோர் நனவிற்கும் கள்ளத்து உருவாம் திருமேனி காட்டி -
தேவர்கள் நனவிற்கும் கிட்டாது மறையும் திருவுருவமாகிய திருமேனியைக்
காட்டி, இதனை விளம்புவார் - இதனைக் கூறுவார் எ - று.
மேய
பெருமான் என வியையும். மருமான் - வழித் தோன்றல்.
வள்ளல் வண்மை யென்னும் பொருளில் முன்னும் வந்தது. வெளிப்பட்டு
நின்ற வழியும் வானோரால் அறியலாகாத உருவ மென்பார் "வானோர்
நனவிற்கும் கள்ளத் துருவாம்" என்றார்; "மன்றுளே மாலயன் றேட ஐயர்தாம்
வெளியே யாடுகின்றாரை" என்பதன் நயமும் ஓர்ந்துணர்க. (4)
அன்ன மிறைகொள் வயன்மதுரைச்
சிவன்யா மரச நீயீன்ற
பொன்னை யனையா டனைமதுரா
புரியிற் கொடுபோய் மறுபுலத்து
மன்னர் மகுட மணியிடற
மழுங்குங் கழற்காற் சுந்தரனாந்
தென்னர் பெருமான் குமரனுக்குக்
கொடுத்தி யென்று செப்புதலும். |
(இ
- ள்.) அரச - மன்னனே, யாம் அன்னம் இறைகொள் வயல்
மதுரைச் சிவன் - யாம் அன்னங்கள் தங்குதலைக் கொண்ட கழனிகள்
சூழ்ந்த மதுரைப் பதியிலிருக்கும் சிவபிரான், நீ ஈன்ற பொன்னை அனையாள்
தனை - நீ பெற்ற திருமகளை யொத்த காந்திமதியை, மதுரா புரியில்
கொடுபோய் - மதுரைப் பதிக்கு அழைத்துக் கொண்டு சென்று, மறு புலத்து
மன்னர் மகுடமணி இடற - வேற்று நாட்டு மன்னர்களின் முடியிலுள்ள
மணிகள் (அவர்கள் வணங்குங்கால்) இடறுதலால், மழுங்கும் கழல்கால் -
தேய்கின்ற வீரக் கழலை யணிந்த காலினை யுடைய, சுந்தரன் ஆம் தென்னர்
|