I


550திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



"புண்ணியமாவது நீறு"

என்னும் தமிழ்மறையானு மறிக; முன்னும் உரைக்கப்பட்டது. போந்தது
என்பது ஈறு தொக்கது. சேந்த : சிவந்த என்பதன் மரூஉ. கேட்டு
ஆராய்ந்ததனை ‘ஆய்ந்த கேள்வி’ என்றார். உபநிடதப் பொருளாகிய
சிவபிரானை ஆராய்தற் கேதுவாகிய சிவாகமக் கேள்வியுடைய
என்றுரைப்பாருமுளர். இல் பொருளுவமை. (24)

ஆதி சைவர் முதற்சைவ ரைவருங்
கோதி லாவகச் சைவக் குழாங்களும்
பூதி மேனியர் புண்ணிய வைந்தெழுத்
தோது நாவின ரொல்லைவந் தெய்தினார்.

     (இ - ள்.) ஆதிசைவர் முதல் சைவர் ஐவரும் - ஆதிசைவர் முதலிய
ஐவகைச் சைவர்களும், கோது இலா அகச் சைவக் குழாங்களும் -
குற்றமில்லாத அகச் சமயிகளாகிய அறுவகைச் சைவக் கூட்டத்தாரும், பூதி
மேனியர் - நீறு பூசிய மேனியராயும், புண்ணிய ஐந்து எழுத்து ஓது நாவினர்
- புண்ணிய வடிவமாகிய திருவைந்தெழுத்தினைப் பயிலும்
நாவினையுடையராயும், ஒல்லை வந்து எய்தினார் - விரைவில் வந்து
சேர்ந்தார்கள் எ - று.

     சைவ ரைவராவார் ஆதி சைவர், மகா சைவர்,அநுசைவர்,
அவாந்தரசைவர், பிரசவசைவர் என்போரென்றும்; அநாதி சைவனாகிய
சிவனை யருச்சிக்கும் சிவவேதியர் ஆதி சைவரென்றும்; சிவ தீக்கை பெற்ற
வைதிகப் பிராமணர் மகா சைவரென்றும், இங்ஙனமே சிவ தீக்கை பெற்ற
ஏனையர் ஏனைய சைவப் பெயர்கட்கு உரிய ராவாரென்றும் கூறுப. ஆதி
சைவப் பெயரொன்றுமே இப்பொழுது வழக்கிலுள்ளது. அகச்சமயங்களாகிய
அறுவகைச் சைவமாவன : சைவம், பாசுபதம், மாவிரதம், காளாமுகம், வாமம்,
வைரவம் என்பன; இவ்வாறனையுமே உட்சமயமெனப் பிங்கல நிகண்டு
கூறிற்று; இவற்றுள் சைவமும், காளாமுகம் ஒழிந்த நான்கும் காபாலமும்
ஐக்கிய வாத சைவமும் ஆகிய ஆறும் அகப்புறச் சமயமெனச் சிவஞான
போத மாபாடியத்தில் உரைக்கப்பட்டுள; அவற்றின் இலக்கணங்களை
ஆண்டுக்காண்க; சங்கற்ப நிராகரணத்துள் ஒதிய பாடாணவாத சைவம்
முதலிய ஆறு சமயங்கள் அகச்சமயமென்று கூறப்படும். (25)

வெண்க ளிற்றவன் வேரியந் தாமரைப்
பெண்க ளிப்புறு மார்பன் பிரமனோ
டொண்க ளிப்புற வும்பர் முதற்பதி
னெண்க ணத்தவர் யாவரு மீண்டினார்.

     (இ - ள்.) வெண்களிற்றவன் - வெள்ளையானையையுடைய இந்திரனும்,
வேரி அம் தாமரைப் பெண் களிப்புறு மார்பன் - தேனையுடைய அழகிய
தாமரை மலரை இருக்கையாகவுடைய திருமகள் இருந்து களிக்கும்
மார்கினையுடைய திருமாலும், பிரமனோடு - பிரமனும், உம்பர் முதல்
பதினெண் கணத்தவர் - தேவர் முதலாகிய பதினெண் கணத்தவரும், யாவரும்
- மற்றையரும், ஒள் களிப்பு உற - சிறந்த மகிழ்ச்சி பொருந்த, ஈண்டினார் -
வந்து சேர்ந்தார்கள் எ - று.