வல்லவா ளெயிறு மிடைவெளி யின்றி
வார்ந்துமேல் கீழிரண் டொழுங்குஞ்
செவ்வனேர்ந் தாவின் பாலென வெள்கித்
திகழினன் றென்பர்* நூ றெளிந்தோர். |
(இ
- ள்.) கொவ்வை வாய் அதரம் - கொவ்வைக் கனிபோலும்
வாயின் இதழ், திரண்டு இருபுடையும் குவிந்து சேந்து - திரண்டு இரண்டு
பக்கமும் குவிந்து சிவந்து, நேர் இரேகை கிடந்தால் - நேரில் இரேகை
இருக்குமாயின், அவ்வணி இழை - அந்த அழகிய அணியினை யுடைய பெய்,
தன் அன்பனுக்கு என்றும் நண்பு உருவாகும் - தன் நாயகனுக்கு
எஞ்ஞான்றும் நட்பின் வடிவாகியிருப்பாள்; வல்ல வாள் எண்ணான்கு எயிறும்
- வலிய ஒளியுள்ள முப்பத்திரண்டு பற்களும், இடைவெளி இன்றி வார்ந்து -
இடைவெளியில்லாமல் நெருங்கிய ஒழுங்கினவாய், மேல் கீழ் இரண்டு
ஒழுங்கும் - மேலும் கீழுமாகிய இரண்டு வரிசைகளும், செவ்வன் நேர்ந்து -
நேராகத் தம்முள் ஒத்து;ஆவின் பாலென வெள்கி - பசுவின் பால்போல்
வெண்மையுடையனவாய், திகழின் - விளங்குமாயின், நூல் தெளிந்தோர் நன்று
என்பர் - உறுப்பு நூலுணர்ந்தோர் நன்மை என்று கூறுவர் எ - று
. அணி
- அழகு; அணியிழை : அன்மொழித் தொகை. வல்ல -
வன் மையுடைய. வெள்கி - வெண்ணிறமுற்று. (34)
மெல்லிதாய்ச் சிவந்து கோமள மான
நாவினாள் வேட்டவேட் டாங்கே
வல்லைவந் தெய்த நுகர்ந்திடுந் தசைந்து
வட்டமா யங்குல மிரண்டின்
உல்லைய தாகி மஞ்சுள மாகி
யிருப்பது சுபுக+ நன் றென்பர்
அலலியங் கமலம் ோன்மணந் திருடீர்ந்
தவிர்மதி போல்வது முகமே. |
(இ
- ள்.) மெல்லிது ஆய் சிவந்து கோமளம் ஆன நாவினாள் -
மென்மையுடையதாய்ச் சிவந்து இளமைபொருந்திய நாவினையுடையாள்,
வேட்ட வேட்டாங்கே வல்லை வந்து எய்த நுகர்ந்திடும் - விரும்பியன
விரும்பியவாறே விரைய வந்து பொருந்த நுகருவாள்; சுபுகம் - மோவாயானது,
தரைந்து வட்டமாய் - தசைப் பற்றுடைய தாய் வட்டமாய், அங்குலம்
இரண்டின் எல்லையது ஆகி - இரண்டங்குல மளவினை யுடையதாய்,
மஞ்சுளமாகிய இருப்பது நன்று என்பார் - அழகியதாயிருத்தல் நன்மை என்று
கூறுவர் பெரியார்; முகம் - முகமானது, அல்லி அம் கமலம் போல் மணந்து
- அகவிதழையுடைய அழகிய தாமரை மலர்போல மணம் வீசி, இருள் தீர்ந்து
அவிர் மதி போல்வது - களங்கமின்றி விளங்கும் திங்களைப்போன்று
(தண்ணொளி) உடைத்தாயிருத்தல் (நன்மையாம்) எ - று.
(பா
- ம்.) * வெள்கிச் சிறிதுயர்ந்திருப்பினன் கென்பர் +சிபுகம்.
|