I


இந்திரன் முடிமேல் வளையெறிந்த படலம்609



     இசைந்த சதமகன் என்க. தாரினுக்கு என்பதனை உருபு மயக்க மாக்கித்
தாரினை யணிந்த என்னலுமாம்; இதுவும் இகழ்ச்சி நாடு முழுதுக்கும் என்க.
நிகளத்தை நீக்கி யென்றுமாம். விட்டான் - விடுத்தான். (55)

முடங்கல் கொண்டணைந்த தூதன் முடிகெழு வேந்தன் பாதத்
தொடுங்கிநின் றோலை நீட்ட வுழையுளா னொருவன் வாங்கி
மடங்கலே றனையான் முன்னர் வாசித்துக் காட்டக் கேட்டு
விடங்கலுழ் வேலான் விண்ணோர் வேந்துரை தேரா னாகி.

     (இ - ள்.) முடங்கல் கொண்டு அணைந்த தூதன் - ஓலை கொண்டு
வந்த தேவ தூதன், முடி கெழுவேந்தன் பாதத்து ஒடுங்கி நின்று ஓலை நீட்ட
- முடியினையுடைய பாண்டி மன்னன் திருவடியின்கீழ் அடங்கி நின்று
ஓலையைக் கொடுக்க, உழையுளான் ஒருவன் வாங்கி - அருகிலுள்ள ஒருவன்
அதனை வாங்கி, மடங்கல் ஏறு அனையான் முன்னர் வாசித்துக் காட்ட -
ஆண்சிங்கத்தை ஒத்த உக்கிரவழுதியின் முன் படித்துக் காட்ட, கேட்டு -
அதனைக் கேட்டு, விடம் கலுழ்வேலான் - நஞ்சுமிழும் வேற்படையையுடைய
அம் மன்னன், விண்ணோர்வேந்து உரை தேரானாகி - தேவேந்திரனுடைய
வார்த்தையைத் தெளியாதவனாய் எ - று.

     முடியை யிழந்த வேந்தன் றூதன், முடியையுடைய வேந்தன் பாதத்தில்
ஒடுங்கி நின்றானென்க. உழையுளான் - கரணத்தான்; திருமுகம் வாசிப்பான்.
மெய்யெனத் தெளியாமல் என்க. (56)

இட்டவன் சிறையை நீக்கி யெழிலியை விடாது மாறு
பட்டசிந் தையனே யாகப் பாகசா தனனுக் கென்றும்
நட்டவ னொருவே ளாள னான்பிணை யென்று தாழ்ந்தான்
மட்டவிழ்ந் தொழுகு நிம்ப மாலிகை மார்பி னானும்.

     (இ - ள்.) இட்டவன் சிறையை நீக்கி எழிலியை விடாது - இடப்பட்ட
வலிய சிறையினின்றும் நீக்கி முகில்களை விடாது, மாறுபட்ட சிந்தையனே
ஆக - மாறுகொண்ட உள்ள முடையனாக, பாகசாதனனுக்கு என்றும்
நட்டவன் ஒரு வேளாளன் - இந்திரனுக்கு எப்பொழுதும் நண்பினனாயுள்ள
ஒரு வேளாளன், நான் பிணைஎன்று தாழ்ந்தான் - நான்பிணை என்று
வணங்கினான்; அவிழ்ந்து மட்டு ஒழுகு நிம்பமாலிகை மார்பினானும் -
மலர்ந்து தேனொழுகும் வேப்ப மலர் மாலையை யணிந்த மார்பினையுடைய
பாண்டியனும் எ - று.

     பாகசாதனனை நட்டவன் என உருபு மயக்கமுமாம். பிணை - புணை;
ஈடு. (57)

இடுக்கண்வந் துயிர்க்கு மூற்ற மெய்தினும் வாய்மை காத்து
வடுக்களைந் தொழுகு நாலா மரபினா னுரையை யாத்தன்
எடுத்துரை மறைபோற் சூழ்ந்து சிறைக்களத் திட்ட யாப்பு
விடுத்தனன் பகடு போல மீண்டன மேக மெல்லாம்.