பண்ணிய தவத்தா லன்றியா தானும்
படுபொருள் பிறிதிலை தவமும்
புண்ணிய தலத்தி னல்லது பலியா
புண்ணிய தலத்தினும் விழுப்பம்
நண்ணிய சைவ தலத்தினி லியற்றி
னல்குமச் சிவதலங் களினும்
எண்ணிய வதிக தலத்தினி லியற்றி
னிருந்தவ மெளிதுடன் பயக்கும். |
(இ
- ள்.) பண்ணிய தவத்தால் அன்றி - செய்த தவத்தினாலல்லாமல்,
பிறிது யாதானும் படுபொருள் இலை - வேறு யாதொன்றினாலும் கைகூடும்
பொருள் இல்லை; தவமும் புண்ணிய தலத்தின் அல்லது பலியா -
அத்தவங்களும் புண்ணியப் பதிகளினன்றிச் சித்திக்க மாட்டா; புண்ணிய
தலத்தினும் விழுப்பம் நண்ணிய சைவ தலத்தினில் இயற்றின் நல்கும் -
அந்தப் புண்ணியப் பதிகளினும் சிறப்புப் பொருந்திய சிவத் தலங்களிற்
செய்தால் (எளிதிற்) பயனளிக்கும்; அச் சிவத் தலங்களினும் - அந்தச் சைவ
தலங்களினும், எண்ணிய அதிக தலத்தினில் இயற்றின் - மதிக்கப்பெற்ற
சிறந்த சிவத்தலத்தில் செய்தால், இருந்தவம் எளிது. உடன் பயக்கும் -
அப்பெரிய தவங்கள் எளிதாக விரைந்து பயனளிக்கும் எ - று.
பிறிது
யாதானும் எனக் கூட்டுக. யாதானும் - யாதினானும். படு
பொருள் இலை என்பதனைப் பொருள் படுதல் இலையெனப் பிரித்தியைக்க;
"வேண்டிய வேண்டியாங்
கெய்தலாற் செய்தவம்
ஈண்டு முயலப் படும்" (திருக்குறள்
- 265) |
என்னும் திருக்குறள்
இங்கு நோக்கற்பாலது. தலத்தினுள்ளும்
தலங்களினுள்ளும் என உள்ளுருபு விரிக்க. எண்ணிய - ஆன்றோரால்
எண்ணப்பட்ட. அதிக தலம் - விசேடத்தலம். (7)
அத்தகு தலமற் றியாதெனி னுலக
மகிலமுந் தன்னுடம் பான
வித்தகன் சென்னிப் பன்னிரு விரன்மேல்
விளங்கிய தலமது சீவன்
முத்தரா யெண்ணில் வானவர் முனிவோர்
முயன்றுமா தவப்பய னடைந்து
சித்தமா சகன்று வதிவதென் றறநூல்
செப்பிய மதுரையந் நகரில். |
(இ
- ள்.) அத்தகு தலம் யாது எனில் - அந்தச் சிறந்த பதி
யாதெனில். அது - அஃது உலகம் அகிலமும் தன் உடம்பான வித்தகன் -
உலக மனைத்தும் தனது வடிவமாகவுள்ள விராட்புருடனது, சென்னிப்
|