|
(இ
- ள்.) கீழ்த்திசை முகத்து ஒன்று அடுத்த நாலைந்தில் இருக்கு
கிளைத்தது - தற்புருட முகத்திலே இருபத்தொரு சாகை களோடு இருக்கு
வேதம் தோன்றியது; தென்பால் இரண்டாம் வேதம் ஈட்டிய நூறு உருவோடு
எழுந்தது - அகோர முகத்தில் யசுர் வேதம் நெருங்கிய நூறு சாகைகளோடும்
தோன்றியது; வடதிசை முகத்தில் சாமம் நீட்டிய ஆயிரம் முகத்தால்
நிமிர்ந்தது - வாமதேவ முகத்தில் சாமவேதம் நீண்ட ஆயிரம்
சாகைகளோடும் தோன்றியது; குடைதிசை முகத்தில் நாட்டிய ஒன்பது
உருவொடு விளைத்து நான்காம் மறை நடந்தது - சாத்தியோசாத முகத்தில்
நாட்டப்பட்ட ஒன்பது சாகைகளோடுந் தோன்றி அதர்வவேதம் நடந்தது
எ-று.
கீழ்த்திசை
என்பது கீட்டிசை யென மருவிற்று. ஒன்றடுத்த நாலைந்து -
இருபத்தொன்று. ஈண்டிய, நீண்ட என்பன ஈட்டிய, நீட்டிய என விகாரமாயின.
இருக்கது, நான்கது என்பவற்றில் அது பகுதிப்பொருள் விகுதி. ஆல், ஆம்,
ஏ என்பன அசைகள். (35)
அருமறை நால்வே றாகையால் வருண
மாச்சிர மங்களு நான்காந்
தருமம்யா காதி கருமமு மறையின்
றகைமையிற் றோன்றின மறையுங்
கருமநூன் ஞான நூலென விரண்டாங்
கருமநூ லிவனருச் சனைக்கு*
வரும்வினை யுணர்த்து ஞானநு லிவன்றன்
வடிவிலா வடிவினை யுணர்த்தும். |
(இ
- ள்.) அருமறை நால் வேறு ஆகையால் - அரிய வேதங்கள்
நான்குவகை ஆகலின், வருணம் ஆச்சிரமங்களும் நான்காம் -
வருணங்களும் நிலைகளும் தனித்தனி நான்கு ஆகும்; தருமம் யாகாதி
கருமமும் மறையின் தகைமையின் தோன்றின - தருமங்களும் வேள்வி
முதலிய வினைகளும் வேதங்களின் நெறியிலே தோன்றின; மறையும் கரும
நூல் ஞானநூல் என இரண்டாம் - அவ்வேதங்களும் கரும காண்டமும்
ஞானகாண்டமுமென இரண்டு வகைப்படும்; கருமநூல் இவன் அருச்சனைக்கு
வரும்வினை உணர்த்தும் - கரும காண்டமானது இச் சொக்கலிங்க
மூர்த்தியின் பூசனைக்குரிய வினைளை அறிவிக்கும்; ஞான நூல் இவன் தன்
வடிவிலா வடிவினை உணர்த்தும் - ஞான நூல் இவன் தன் வடிடிவலா
வடிவினை உணர்த்தும் -ஞான காண்ட மானது இவனது சச்சிதானந்த
வடிவத்தை அறிவிக்கும் எ - று.
ஆச்சிரமம்
- நிலை; அது பிரிமசரியம், கிருகத்தம், வானப்பிரத்தம்,
சன்னியாசம் என நான்காம். தகைமை - கூறுபாடு. நூல் என்றது காண்டத்தை.
வடிவிலா வடிவு - சொரூப மெனப்படும் சச்சிதானந்த வடிவு; நிட்களமுமாம்.
(36)
முதனுகர் நீராற்சினை
குழைத்+தாங்கிம்
முழுமுதற கருத்துநல் லவியின்
பதமிவன் வடிவப் பண்ணவத் பிறக்குந்
திருத்தியாம் பரனிவன் முகத்தின். |
(பா
- ம்) * இவனையர்ச்சிக்க. +கிளைத்தாங்கு
|