I


72திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



ஆகுபெயர். கலைமகள் அயனக்கு மனைக்கிழத்தியாகலின் திருமாலுக்கு
மருகியாயினள். திருமான் எனப்பிரித்து இலக்குமிக்கு மருமகளென்னலுமாம்.
திருமான் - திருவாகிய மான்.

"நாவின் கிழத்தி யுறைதலாற் சேராளே
பூவின் கிழத்தி புலந்து"

என்பதிலும் இவர் மாமியும் மருகியும் என்பது தோன்றக் கூறப்பட் டிருத்தல்
காண்க. ஞானந்தருமகள் - உமை;

"ஆகமங்க ளெங்கே யறுசமயந் தானெங்கே
யோகங்க ளெங்கே யுணர்வெங்கே - பாகத்
தருள்வடிவுந் தானுமா யாண்டிலனே லந்தப்
பெருவடிவை யாரறிவார் பேசு"

என்று திருக்களிற்றுப்படியார் கூறுவது இங்கே சிந்திக்கற்பாலது. ஆனது
என்பதனை முற்றாக்கிக் கூடம் முதலியவற்றொடும் கூட்டி நான்கு
முடிபாட்குவாரு முளர். இந்நகரமானது செல்வத்தானும், கல்வியானும்,
ஞானத்தானும் ஏனையவற்றினுஞ் சிறந்து விளங்குவ தென்பது கருத்து.
செல்வ முதலியவற்றுக்கு இருக்கையென்றும், அவற்றைத் தருவது என்றும்
கருத்துக்கொள்ளலுமாம். ஏ : அனைத்தும் அசை; தேற்றமுமாம். (4)

திக்கும் வானமும் புதையிரு டின்றுவெண் சோதி
கக்கு மாளிகை நிவப்புறு காட்சியந் நகருள்
மிக்க வாலிதழ்த் தாமரை வெண்மக ளிருக்கை
ஒக்கு மல்லது புகழ்மக ளிருக்கையு மொக்கும்.

     (இ - ள்.) திக்கும் வானமும் - திசைகளையும் ஆகாயத்தையும்,
புதை - மறைத்த, இருள் தின்று - இருளை விழுங்கி, வெண்சோதி கக்கும் -
வெள்ளிய ஒளியைக் காலுகின்ற, மாளிகை நிவப்புறு காட்சி - மாளிகைகள்
உயர்ந்துள்ள தோற்றம், அந்நகருள் - அந்நகரின்கண், மிக்க வால்இதழ்
தாமரை - மிக்க வெண்மையையுடைய இதழ்களை யுடைய தாமரையாகிய,
வெண்மகள் இருக்கை ஒக்கும் - கலைமகளின் இருப்பிடம்போலும், அல்லது
- அன்றி, புகழ்மகள் இருக்கையும் ஒக்கும் - புகழ்மாதின் இருப்பிடமும்
போலும் எ - று.

     வெண்சோதி - முத்து, வயிரம், சுண்ணம் என்பவற்றாலாய
வெள்ளொளி. இருளைத் தின்று சோதியைக் கக்குமென ஒரு நயம்படக்
கூறினார். தாமரையாகிய இருக்கை யென்க. புகழையும் வெண்ணிற
முடையதாகக் கூறுதல் மரபாகலின் ‘புகழ்மக ளிருக்கையு மொக்கும்’
என்றார். (5)

                புறம்பணை

நெற்க ரும்பெனக் கரும்பெலா நெடுங்கழு கென்ன
வர்க்க வான்கமு கொலிகலித் தெங்கென வளர்ந்த
பொற்க வின்குலைத் தெங்குகார்ப் பந்தரைப் பொறுத்து
நிற்க நாட்டிய காலென நிவந்ததண் பணையே.