II


10திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



முதலியவற்றில் எண்ணும்மை விரிக்க. போர்த்த ; அன்பெறாத முற்று, ஏய,
ஏவிய என்பதன் விகாரம். (15)

அன்னநான் மாடத் துள்ளு நகருளா ரமைச்சர் வேந்தன்
தன்னநாற் கருவித் தானை சராசரம் பிறவுந் தாழ்ந்து
முன்னைநா டனினு மின்ப மூழ்கிநன் கிருந்தா ரூழிற்
பொன்னனாள் பாகன் றாளிற் புக்கமர்ந் திருந்தா ரொத்தார்

     (இ - ள்.) அன்னநான் மாடத்துள்ளும் - அந்த நான்கு
மாடங்களினுள்ளும், நகருளார் அமைச்சர் வேந்தன் - நகரிலுள்ளவரும்
மந்திரிகளும் மன்னனும், தன்ன நால் கருவித்தானை - அவனுடைய
நால்வகைப்பட்ட கருவியாகிய சேனைகளும், சர அசரம் பிறவும் தாழ்ந்து -
இயங்குவனவும் நிற்பனவுமாகிய பிறவுயிர்களும் தங்கி, முன்னை நாள் தனினும்
இன்பம் மூழ்கி நன்கு இருந்தார் - முன்னாளினும் இன்பக் கடலிற் றிளைத்து
நன்றாக இருந்தனர் (ஆதலின் அவர்), ஊழின் - முறைப்படி, பொன்னனாள்
பாகன் தாளில் புக்கு அமர்ந்து இருந்தார் ஒத்தார் - உமைபாகனாகிய
சிவபெருமானது திருவடி நீழலிற் புகுந்து மகிழ்ச்சி யுடனிருப்பவரை ஒத்தனர்.

     தன்ன என்பதில் அகரம் ஆறனுருபு, னகரம் விரித்தல். அவன்
றன்னுடைய வென்க. கருவித்தானை : இருபெயரொட்டு. பிறவும் என்பதிலுள்ள
உம்மையை நகருளார் முதலிய வற்றோடும் கூட்டுக. தாழ்தல் - தங்குதல்.
முன்னைநாள் என்பதனை முன்னாட்களெனப் பொதுவாகப் கொள்க;
வருணன்விட்ட கடலை வற்றச்செய்த நாள் என்பாருமுளர். ஆகலின் அவர்
என வருவிக்க. சிவபுண்ணிய முதிர்ச்சியால் இருவினை யொப்பு முதலியன
எய்தப்பெற்று அடைய வேண்டுவதாகலின், ஊழிற்புக்கமர்ந்திருந்தார் என்றார்.
(16)

.கழைகெழு வரையி னுச்சி கவிழ்கின்ற புயல்போற் கார்சூழ்ந்
திழைமணி மாடத் தும்ப ரெறிதுளி யுடைந்து துள்ளத்
தழைகடல் வறப்ப வாங்கித் தம்முடல் வளப்பப் பெய்து
மழைகளும் வெள்கி நின்ற வருணனும் வெள்கி நின்றான்.

     (இ - ள்.) கழை கெழுவரையின் உக்சி கவிழ்கின்ற புயல்போல் -
மூங்கில்கள் நிறைந்த மலையின் உச்சியிற் பெய்கின்ற மழை உடைந்து
சிதறுதல்போல, கார் சூழ்ந்து இழைமணி மாடத்து உம்பர் எறிதுளி உடைந்து
துள்ள - (சிவபிரான் விடுத்த நான்கு) முகில்களாற் சூழ்ந்தியற்றப்பட்ட
அழகிய மாடத்தின்மேல் எறியப்படுகின்ற துளிகள் உடைந்து சிதற, தழை
கடல் வறப்ப வாங்கித் தம் உடல் வறப்பப் பெய்து - நீர் நிரம்பிய கடலானது
வறளுமாறு நீரினை முகந்து தமது உடல் பசையறுமாறு பொழிந்து, மழைகளும்
வெள்கி நின்ற - (வருணன் விடுத்த) முகில்களும் வெள்குற்று நின்றன;
வருணனும் வெள்கி நின்றான் - வருணனும் நாணமுற்று நின்றான் எ - று.

     முகந்த நீரைக் கவிழ்ப்பது போன்று ஒருங்கு பொழியும் மழை
யென்பார் ‘கவிழ்கின்ற புயல்’ என்றும், கடுவிசையுடன் வீழ்க்கப்படும்