"முட்டாமற் செலுத்தியவாறு......................
தன்கை குறைத்தான் கண்ணும் காண்க" |
என்றனர். தீமை செய்தாய்
போல் என்றது தீமை செய்யாமையைக்
காட்டுகின்றது. (17)
பிறங்குங் கோலான் மாறடு கொற்றம் பெறுவேந்தன்
உறங்கும் போதுந் தன்னரு ளாணை யுலகெங்கும்
அறங்குன் றாவாக் காப்பதை யென்ப வஃதியாதிம்
மறங்குன் றாதான் செய்கொலை காவா வழியென்றான். |
(இ
- ள்.) பிறங்கும் கோலால் மாறுஅடு கொற்றம் பெறு வேந்தன்
- விளங்குகின்ற செங்கோலினாலே பகைவரை வெல்லும் வெற்றியையுடைய
அரசன், உறங்கும் போதும் - தூங்கும் போதும், தன் அருள் ஆணை -
அவன் அருளாணையானது, உலகு எங்கும் அறம் குன்றாவா காப்பது
என்ப - உலக முற்றும் அறங்கள் குறையாவாகக் காப்பது என்று நூலோர்
கூறுவர்; அஃது - அக்கூற்றானது, இம்மறம் குன்றாதான் செய் கொலை
காவா வழி - இக் கொலைத் தொழில் குறையாத வேடன் செய்த
கொலையைக் காவாவிடத்து, யாது என்றான் - என்ன பயனுடைத்து
என்றான்.
அரசனது
வெற்றிக்கு அவனது செங்கோல் காரணம் என்பதை,என்னும்
வாயுறைவாழ்த்தா
"வேலன்று வென்றி
தருவது மன்னவன்
கோலதூஉம் கோடா தெனின்" |
லறிக. "மாண்ட, அறநெறி முதற்றே யரசின் கொற்றம்" என்றார் பிறரும்.
கோலான் என்பதற்குக் கோலையுடையன் என்று பிறர் பொருள் கூறியது
சிறிதும் சிறப்பின்றாதலறிக. மாறு - பகை; பகைவரை யுணர்த்திற்று.
அருளாணை - அருளுடன் கூடிய ஆணை, அரசன் துயிலும் பொழுதும்
அவனது தெய்வத் தன்மையாகிய ஆணையானது உலகம்
புரத்தலை,
"உறங்கு மாயினு
மன்னவன் றன்னொளி
கறங்கு தெண்டிரை வையகங் காக்குமால்" |
என்று சீவகசிந்தாமணி
கூறுகின்றது. ஆகவென்பது ஈறு தொக்கது.
காப்பதை, ஐ : சாரியை. யாது எத்தன்மைத்து. காக்கவில்லையென்பான்
'காவாவழி' என்றான், அஃது - அவ்வாணை யெனலுமாம். அஃதியாது :
குற்றியலிகரம். (18)
வாயிலு ளார்த மன்னவன் முன்போய் மன்னாநங்
கோயிலின் மாடோர் வேதியன் மாதைக் கொலைசெய்தான்
ஆயின னென்றோர் வேடனை முன்விட் டவிந்தாளைத்
தாயினன் வந்திங் கிட்டயர் கின்றான் றமியென்றார்.
|
|