ஆற்ற வொறுக்குந்
தண்டமு மஞ்சா னறைகின்ற
கூற்றமு மொன்றே கொன்ற குறிப்பு முகந்தோற்றான்
மாற்றவ ரேயோ மாவோ புள்ளோ வழிவந்த
கோற்றொடி யைக்கொன் றென்பெற வல்லான் கொலைசெய்வான்.
|
(இ
- ள்.) ஆற்ற ஒறுக்கும் தண்டமும் அஞ்சான் - மிகவும் ஒறுக்கும்
தண்டத்திற்கும் அஞ்சுகின்றிலன்; அறைகின்ற கூற்றமும் ஒன்றே - இவன்
கூறுகின்ற மறுமொழியும் (வேறுபாடின்றி) ஒன்றேயாயுள்ளது; கொன்ற குறிப்பும்
முகம் தோற்றான் - கொன்ற குறிப்பும் முகத்திலே தோன்றப் பெற்றிலன்;
மாற்றவரேயோ மாவோ புள்ளோ - தனக்குப் பகைவரோ (அன்றி) விலங்கோ
பறவையோ, வழி வந்த கோற்றொடியைக் கொன்று என்பெற வல்லான் -
வழியில் வந்த பார்ப் பனியைக் கொல்லுதலால் என்ன பயனைப் பெறுவானாய், கொலை செய்வான்
- (இவன், அவளைக்) கொலை செய்தற் குரியனாவான்.
"அடுத்தது காட்டம்
பளிங்குபோ னெஞ்சங்
கடுத்தது காட்டு முகம்" |
என்பவாகலின், இவன்
கொன்றிருப்பானாயின் அக் குறிப்பு முகத்திலே
தோன்ற வேண்டும்; அங்ஙனம் தோன்றிற் றில்லையென்பான் 'கொன்ற
குறிப்பு முகந் தோற்றான்' என்றான். பகைவர், விலங்கு, புள் என்பவற்றுள்
ஒன்றாயின் இவன் கொல்லுதல் பொருந்தும், அவற்றுள் ஒன்றல்லாத
பார்ப்பனியைக் கொல்லுதலால் இவன் கொன்றா னென்பது எங்ஙனம்
என்பான் 'மாற்றவரேயோ............கொலை செய்வான்' என்றான். ஓகாரங்கள்
தெரிநிலைப் பொருளன. கோற்றொடி - கோல் போற் றிரண்ட வளையினை
யுடையாள்; அன்மொழித் தொகை. 'மாற்றவ ரேயோ மாவோ புள்ளோ'
என்பதற்கு, அவளைக் கொன்றது அம் மறையோனுக்குப் பகைவராயினாரோ
அன்றி விலங்கோ பறவையோ என்றும், 'கொலை செய்வான்' என்பதற்கு
வேடன் என்றும் பிறர் பொருள் கூறுவாராயினர். இதுவும் வருஞ் செய்யுளும்
அரசன் உட்கோள். (27)
கைதவ னாமிக் கானவ னேயோ பிறரேயோ
செய்தவர் யாரே யிக்கொலை வேட்டஞ் செய்தோர்மா
எய்த விலக்கிற் றப்பிய கோறா னேறுண்டிம்
மைதவழ் கண்ணாள் மாய்ந்தன ளேயோ வறியேனால். |
(இ
- ள்.) இக்கொலை செய்தவர் - இந்தக் கொலையினைப்
புரிந்தவர், கைதவனாம் இக்கானவனேயோ - வஞ்சனாகிய இவ்வேடன்றானோ,
பிறரேயோ - (அன்றிப்) பிறரோ, யாரே - யாரோ, வேட்டம் செய்தோர் மா
எய்த இலக்கில் தப்பிய கோல்தான் ஏறுண்டு - (அல்லது) வேட்டையாடுவோர்
விலங்கினை எய்த குறிப்பினின்றும் பிழைத்த கணைதான் தைத்தலால், இம்
மைதவழ் கண்ணாள் மாய்ந்தனளேயோ - இந்த மை தீட்டிய
கண்களையுடையவள் இறந்தனளோ, அறியேன் - அறிந்திலேன்.
|