II


பழியஞ்சின படலம்119



வெருள விடுத்து - இந்த மணவிழாவின் ஆரவாரத்தினாலே கயிற்றையறுத்து
வெருண்டோடச் செய்து, இவன் ஆவி கவர்க என்றான் - இவனுயிரை
வௌவுவேமாக என்றான்.

     சாறு - விழா. ஈற்றா - கற்றினையீன்ற அணிமையையுடைய பசு;
புனிற்றா, கவர்கவென வியங்கோள் தன்மைக்கண் வந்தது; அகரந்தொகுத்தல்;
கவர்கும் என்னும் தன்மைப் பன்மை விகாரமாயிற்றுமாம். பார்ப்பனி உயிரை
எங்ஙனம் கவர்ந்தேமோ அங்ஙனம் இவனாவியைக் கவர்வேம் என்றானென்க.
(37)

அந்தமொழி கேட்டரச னருமறையோய் கேட்டனையோ
இந்தமொழி யெனப்பனவ னிவனிவ்வா றிறந்தாலென்
பைந்தொடியா ளிறந்ததுமப் படியேயென் மனக்கவலை
சிந்தவிது காண்பேனென் றொருங்கிருந்தான் றென்னனொடும்.

     (இ - ள்.) அந்த மொழி அரசன் கேட்டு - அவ் வார்த்தையை
மன்னவன் கேட்டு, அரு மறையோய் - அரிய வேதங்களையுணரும்
அந்தணனே, இந்த மொழி கேட்டனையோ என - இவ் வார்த்தையைக்
கேட்டாயோ என வினவ, பனவன் - அப்பார்ப்பனன், இவன் இவ்வாறு
இறந்தால் - இம்மணமகன் இங்குக் கூறியவாறே இறந்து படுவானாயின்,
என் பைந்தொடியாள் இறந்ததும் அப்படியே - என் மனைவி இறந்ததும்
அங்ஙனமே தான், என் மனக் கவலை சிந்த இது காண்பேன் என்று -
எனது மனத் துன்பங்கெட இந்நிகழ்ச்சியைக் காண்பேனென்று கூறி, தென்னனொடும் ஒருங்கு இருந்தான் - பாண்டியனோடும் ஒரு சேர இருந்தனன்.

     அப்படியே - அங்ஙனமேயென்பது உண்மையாகும். (38)

ஒட்டியபல் கிளைதுவன்றி யொல்வொலிமங் கலந்தொடங்கக்
கொட்டியபல் லியமுழங்கக் குழுமியவோ சையின் வெருண்டு
கட்டியதாம் பிறப்புனிற்றுக் கற்றாவொன்* றதிர்ந்தோடி
முட்டியதான் மணமகனை முடிந்ததா லவனாவி.

     (இ - ள்.) ஒட்டிய பல் கிளைதுவன்றி ஒல்லொலி மங்கலம் தொடங்க
- நெருங்கிய பல சுற்றத்தாரும் சேர்ந்து ஒல்லெனும் ஒலியுடன்
மணவினையைத் தொடங்கவும், கொட்டிய பல் இயம் முழங்க - அகப்பட்ட
பல் இயங்களும் ஒலிக்கவும், குழுமிய ஓசையின் - இவை ஒருங்கு தொக்க
வேரொலியால், கட்டிய தாம்பு இற - கட்டப்பட்ட கயிறு அறுமாறு, புனிற்றுக்
கன்று ஆ ஒன்று - இளங் கன்றினையுடைய பசு ஒன்று, வெருண்டு அதிர்ந்து
ஓடி மணமகனை முட்டியது - அஞ்சி அலறி மணமகனை முட்டியது; அவன்
ஆவி முடிந்தது - அவன் உயிர் முடிந்தது.

     ஒட்டிய - அணுகிய. மங்கலந் தொடங்க - கடிசூத்திரம் அணியத்
தொடங்குகையில் என்றுமாம். கொட்டப் பட்டனவாகி முழங்கவென்று


     (பா - ம்.) * எதிர்ந்தோடி.