|
நால்வரும் தன்னை
விட்டு நீங்கினமையால், தானும் ஒத்தாள் - தானும்
அதற்குடன்பட்டாள்.
அழிதகையாள்
- கற்பழிந்தவள்; தீநெறிப் பட்டவள்; ஆண்பாலில்
அழிதகையான் என்று வரும். துணையாகவும் காவலாகவும் மன்னும் என
விரிக்க. நாற்குணமும் நான்கு காவலர் போலுதலின் 'நால்வர்' என
உயர்திணையாற் கூறினார்;
என்பர் புகழேந்தியாரும்.
தானும் என்பதில் உம்மை இறந்தது தழுவிய
எச்சம். அரோ, அசை. (7)
இன்ப மோசிறி தாகு மிதில்வருந்
துன்ப மோகரை யில்லாத் தொடுகடல்
என்ப தாரு மிவனா லறியவிவ்
வன்ப தான வினையால் வருந்துவான். |
(இ
- ள்.) இன்பமோ சிறிது ஆகும் (காமத்தால் வரும்) இன்பமே
அற்பமாகும், இதில் வரும் துன்பமோ கரையில்லாத் தொடு கடல் - இதனால்
விளையுந் துன்பமோ கரையில்லாத கடலாகும், என்பது - என்னும்
உண்மையை, ஆரும் இவனால் அறிய - யாவரும் இப்பாவியினால் அறிந்து
கொள்ள, இவ்வன்பது ஆனவினையால் வருந்துவான் - இக் கொடுமையான
தீவினையால் வருந்துவானாயினன்.
கணத்துள்
அழிவது என்பார் 'சிறிது' என்றும், அளவிறந்த காலம்
நிற்பது என்பார் 'கரையில்லாத் தொடுகடல்' என்றும் கூறினார். தொடு -
தோண்டப்பட்ட; கடலுக்கு அடை. வன்பது, அது பகுதிப் பொருள் விகுதி. (8)
மைய னாக மதியை விழுங்கவக்
கைய னாயைக் கலந்தொழு குஞ்செயல்
ஐயன் றான்குறிப் பாற்கண் டயற்செவிக்
குய்ய லாவண்ண முள்ளத் தடக்கினான். |
(இ
- ள்.) மையல் நாகம் மதியை விழுங்க - காம மயக்கமாகிய
இராகுவானது அறிவாகிய மதியை விழுங்கலால், அக் கையன் ஆயைக்
கலந்து ஒழுகும் செயல் - அந்தக் கீழ்மகன் தாயைக் கூடியொழுகுஞ்
செயலினை, ஐயன் குறிப்பால் கண்டு - அவன் தந்தையானவன்
குறிப்பாலறிந்து, அயல் செவிக்கு உய்யலா வண்ணம் உள்ளத்து அடக்கினான்
- பிறர் செவிக்குச் செல்லாவாறு அதனை மனத்தின்கண் அடக்கியொழுகினான்.
மதி
என்பது இரட்டுற மொழிதலாய் அறிவையும் திங்களையும்
குறித்தது; காம மயக்கத்தால் அறிவு முழுதையும் இழந்தானென்க. கையன்
-சிறுமையுடையன்; கீழோன். ஆய் - தாய். ஐயன் - தந்தை. உய்யலா -
செல்லாத; ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்; அல்; எதிர்மறை
இடைநிலை. உய் என்னும் பகுதி தன்வினை குறித்து நின்றது. வேறு யாரும்
அறியா வண்ணம் என்பார் 'அயற் செவிக்கு' என்றார். (9)
|