| [அறுசீரடியாசிரிய
விருத்தம்] |
வேதமுதற்
கலைகாட்சி முதலளவை விரிஞ்சன்முதல் விண்ணோர்
செய்யுஞ்
சோதனை ளகப்படாச் சோதியுனைச் சோதிக்கத்
துணிந்தேனந்தோ
பேதைமையே னிடத்தென்ன குணங்கண்டென்
பிணிதீர்த்தென் பெற்றா யாசை
கோதமிலாய் குற்றமே குணமாகக் கொள்வதுநின்
குணமோவையா. |
(இ
- ள்.) வேதம் முதல்கலை - மறைமுதலிய கலைகளுள்ளும், காட்சி முதல்
அளவை - காட்சி முதலிய ஏனை அளவைகளுள்ளும், விரிஞ்சன் முதல்
விண்ணோர் செய்யும் சோதனையுள் - பிரமன் முதலிய தேவர்கள் செய்யும்
ஆராய்ச்சியுள்ளும், அகப்படாச் சோதி - அகப்படாத ஒளி வடிவினனே,
அந்தோ உனைச் சோதிக்கத் துணிந்தேன் - ஐயோ நின்னை (ஒன்றுக்கும்
பற்றாத யானும்) ஆராயத் துணிந்தேனே, பேதைமையேன் இடத்து என்ன
குணம் கண்டு என் பிணி தீர்த்து என் பெற்றாய் - அறிவிலியாகிய
என்னிடத்து என்ன குணநலத்தினைக் கண்டு எனது நோயைப் போக்கி
அதனால் என்ன பேறு பெற்றனை, ஆசை கோதம் இலாய் - விருப்பு
வெறுப்பில்லாதவனே, ஐயா - ஐயனே, குற்றம் குணமாகவே கொள்வது நின்
குணமோ - அடியார் செய்யும் குற்றங்களைக் குணமாகவே கொள்வது நினது
அருட் குணமோ!
வேதமுதற்கலை
- உரையளவை. காட்சி முதலியவற்றிற்கு எய்தா
தவற்றையும் உணர்த்தலின் உரையளவையை வேறு பிரித்தோதினார்.
கலையானும் அளவையானும் விண்ணோர் செய்யும் சோதனை எனலுமாம்;
| "மறையினா லயனால்
மாலால் மனத்தினால் வாக்கால் மற்றும் குறைவிலா வளவி னாலுங் கூறொணா தாகிநின்ற
இறைவனார்" |
என்று
சிவஞான சித்தியார் கூறுவது காண்க. எத்தனையும் அரிய உன்னை
இறப்ப இழிந்த யானும் சோதிக்கத் துணிந்தேனே என்றிரங்கி அந்தோ
என்றான். ஒழுக்கம் அன்பு அருள் ஆசாரம் உபசாரம் உறவு சீலம்,
வழுக்கிலாத் தவம் தானங்கள் வந்தித்தல் வணங்கல் வாய்மை, அழுக்கிலாத்
துறவு அடக்கம் அறிவொடு அர்ச்சித்தல், முதலியவற்றுள் ஒன்றும்
உடையனல்லேன் என்பான் என்ன குணங்கண்டு என்றான. என்ன
குணங்கண்டு என்பிணி தீர்த்தாய், பிணி தீர்த்து என் பெற்றாய் என விரிக்க.
கோதம், குரோதம் என்பதன் சிதைவு.
| "யாதுநீ பெற்றதொன்
றென்பால்" |
| "குன்றே யனைய
குற்றங்கள் குணமா மென்றே நீ கொண்டால்" |
என்னும் மணிவாசங்கள்
இங்கே சிந்திக்கற்பாலன. (22)
பொன்னகரான்
காலந்தாழ்த் துனையருச்சித் தயர்ச்சியொடும்
போன வாறும்
என்னெனயான் வினவியதும் வலாரியிறை கொடுத்ததுமவ்
விறைக்கு நேர்யான்
பின்னைவினா யதுமவன்சொல் வழியுன்னைச் சோதித்த
பெற்றி தானும்
முன்னவனே யுன்னருளா லென்பிணிக்கு மருந்தாகி முடிந்த
தன்றே. |
|